What Is The Gas Contained in Packets Of Chips in Tamil
ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி உங்களுக்கு சிப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா..? இது என்ன கேள்வி சிப்ஸ் யாருக்கு தான் பிடிக்காது என்று கேட்பீர்கள். அப்படி சாப்பிடுபவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!
தண்ணீருக்கும் நிறம் உண்டு அப்போ தண்ணீரின் நிறம் என்ன தெரியுமா |
சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது..?
பொதுவாக நாம் அனைவருமே சிப்ஸ் விரும்பி சாப்பிடுவோம் அல்லவா..! பெரும்பாலும் நம்மில் பலரும் கடைகளில் கிடைக்கும் சிப்ஸ்களை தான் வாங்கி சாப்பிடுகிறோம்.
அப்படி சாப்பிடும் போது அந்த சிப்ஸ் பாக்கெட்களில் காற்று நிரப்பி வைத்திருப்பார்கள். ஏன் அப்படி காற்று நிரப்பி வைக்கிறார்கள், அப்படி அதில் நிரப்பும் வாயு எது என்று நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு பார்க்கலாம் வாங்க..!
மின்மினி பூச்சிகள் ஏன் மின்னுகிறது அதற்கு காரணம் என்ன தெரியுமா
பெரும்பாலும் எண்ணெயால் பொறிக்கப்பட்ட பொருட்கள் சில நாட்களில் கெட்டுப்போய் அதன் சுவை மாறிவிடும். அதற்கு காரணம் நொறுக்கு தீனிகளில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள் ஆக்சிஜனுடன் வேதிவினை புரிந்து ஆக்சிஜனேற்றம் அடைகின்றது. இதை தான் ஆங்கிலத்தில் Rancidity என்று சொல்கின்றோம்.இதுபோல எண்ணெயால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தான் சிப்ஸ் பாக்கெட்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகின்றன. இதனால் நொறுக்கு தீனிகள் ஆக்சிஜனுடன் வினைபுரிவது தடுக்கப்படுகின்றன. அதனால் நொறுக்கு தீனிகள் கெட்டுப்போகாமலும், சுவை மாறாமலும் இருக்கும்.
இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |