மின்மினி பூச்சிகள் ஏன் மின்னுகிறது..! அதற்கு காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Why Do Fireflies Sparkle in Tamil

வாசகர்களுக்கு அன்பு வணக்கம்..! இன்றைய பதிவில் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. அதுபோல நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று மின்மினி பூச்சி மின்னுவதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!

இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா

மின்மினி பூச்சிகள் மின்ன காரணம் என்ன..?

மின்மினி பூச்சி எப்படி மின்னுகிறது

நாம் சிறு வயதிலிருந்தே இந்த மின்மினி பூச்சியை பார்த்து வருகின்றோம். அதுபோல மின்மினி பூச்சியை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மின்மினி பூச்சியை பார்க்க அவ்வளவு ஆசைப்படுவார்கள்.

சரி அப்படி நீங்கள் மின்மினி பூச்சியை பார்க்கும் போது அதன் உடம்பில் ஒரு வெளிச்சம் தெரியும். ஏன் அப்படி வெளிச்சம் வருகிறது, அதற்கு காரணம் என்ன என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..?

நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா

அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான பதிலை இங்கு காணலாம்.

மின்மினி பூச்சிகளின் உடலில் ஒரு விதமான வேதிவினைகள் உருவாகின்றன. அவை தான் மின்மினி பூச்சிகளுக்கு ஒளியை உண்டாக்குகின்றன.

 அதாவது மின்மினி பூச்சிகளின் வயிற்று பகுதியில் ஒருவிதமான Luciferin என்ற கனிம மூலக்கூறுகளும் Luciferase என்ற வினையூக்கிகளும் இணைந்து ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. அதனால் மின்மினி பூச்சியின் வயிற்றில் ஒருவிதமான வேதிவினை நடக்கிறது. அதன் காரணமாக தான் மின்மினி பூச்சியின் உடலில் வெளிச்சம் உண்டாகிறது.  
ஐஸ்கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா

இப்படி மின்மினி பூச்சியின் உடலில் இருந்து வரும் ஒளியை தான் Bioluminescence என்று சொல்கிறார்கள். அதுபோல ஒளி உருவாக தேவைப்படும் வேதிப் பொருட்களுடன் ஆக்சிஜன் இணைவதால் தான் இந்த வெளிச்சம் உண்டாகிறது. ஒருவேளை பூச்சியின் உடலில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால் அந்த வெளிச்சம் ஏற்படாது.

மின்மினி பூச்சி:

மின்மினி பூச்சி வண்டி இனத்தை சார்ந்ததாக இருக்கிறது.

மின்மினி பூச்சிகளிடமிருந்து ஒலிகள் வருவதற்கு காரணம் இவற்றில் இருக்கும் லூசிஃ பெரேஸ் எனும் என்சைமே  என்ற பொருள் தான் காரணமாக இருக்கிறது.  இவற்றில் இருக்கும் வேதி ஆற்றலானது ஒளி ஆற்றலாக மாற்றி நமக்கு ஒளியை தருகிறது.

இந்த பூச்சியானது நேரடியாக இரையை சாப்பிடாது. இந்த இரையை மயக்கம் ஆடையை செய்து அதனை நீராக உறிஞ்சி குடித்து விடும்.

இந்த பூச்சிகளுக்கு  நுரையீரல் இருக்காது.  இவற்றில் இருக்கும் ட்ரக்கியோல்கள் குழாய்கள் மூலம் ஆக்சிஜனை எடுத்து கொள்கிறது. இவ்வளவு அதிசயம் நிறைந்த பூச்சியாக இருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்படுகிறீரகள் அல்லவா!

இவற்றால் வேகமாக பார்க்க முடியாது. இவற்றின் ஆயுட் காலம் வெறும் 2 மாதங்களாக இருக்கிறது.

இந்த பூச்சியில் பெண் பூச்சியை விட ஆண் பூச்சி தான் அதிகமாக இருக்கிறது.

நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement