நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா..?

Can We Drink Water After Eating Gooseberry in Tamil

Can We Drink Water After Eating Gooseberry in Tamil

நாம் அனைவருமே சிறு குழந்தையாக இருக்கும் போது கடையில் விற்கும் நெல்லிக்காய் வாங்கி சாப்பிடுவது பழக்கம். அப்படி சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் சுவையாக இருக்கும். இது யாருக்கு தெரியும். இதனை பற்றி யார் யோசித்தது..!

அப்படி  யாருக்கும் தெரியவில்லை என்றால் உடனே நெல்லிக்காய வாங்கி அதனை சாப்பிட்டு அதன் பின்பு தண்ணீர் குடித்து பாருங்கள்..! சரி வாங்க அப்படி தண்ணீர் குடித்தால் ஏன் இனிக்கிறது அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Can We Drink Water After Eating Gooseberry in Tamil:

நெல்லிக்காய் நன்மைகள்:

வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன. அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சர் விரைவாக குணமாகும்.

இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்தானது, ஆஸ்கோர்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படும் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து உள்ளது. நெல்லிகாய் ஆனது புளிப்பு சுவை கொண்டது. அதை சாப்பிடும் போது நாக்கில் ப்ரோட்டான்கள் சார்ந்துவிடும். அப்போது நாம் தண்ணீர் குடிக்கும் போது உணவு குழாய்களுக்கு சுவையை சேர்த்து எடுத்து செல்லும்.

மற்ற பழங்களில் உள்ள சத்துக்கள் போல் நெல்லிக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், சிட்ரிக் அமிலம் உள்ளிட்டவை சிறிய அளவில் அமைந்துள்ளது.

 நமது நாவின் அடியில் உள்ள சுரப்பியில் சுரக்கும் எச்சிலில் சலைவரி ஆம்லேஸ் என்கிற நொதி காணப்படும். இந்த நொதியானது நெல்லிக்காயில் உள்ள ப்ரோட்டானுடன் சேர்க்கும் போது அதில் உள்ள ஸ்டார்ச்-ஐ உடைத்து மால்டோஸ் அதாவது சர்க்கரை ஆக மாறுகிறது. இதனால் தான் நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டு  தண்ணீர் குடிக்கும் போது இனிப்பு சுவை வருகிறது.  

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா  இது தெரியாம போச்சே

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking