The Reason Why Sambar Got its Name in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இப்பொழுது நாம் ஒரு பொருளை பார்க்கின்றோம் என்றால் அதற்கான பெயர் எவ்வாறு வந்தது அது எவ்வாறு உருவானது அதனை கண்டுபிடித்தவர் யார் என்ற பல கேள்விகள் நமது மனதில் எழும். அப்படி உங்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் தான் இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவான சாம்பாருக்கு ஏன் சாம்பார் என்ற பெயர் வந்தது என்றும் அதனை யார் கண்டுபிடித்தது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மயில் என்ற பெயர் வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா
சாம்பார் என்ற பெயர் எப்படி வந்தது..?
சாம்பார் என்பது நாம் அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு உணவு ஆகும். அதிலும் குறிப்பாக இது தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்.
இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை மற்றும் துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான்.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. மராத்தியர்களின் உணவான சாம்பார், தமிழ்நாட்டில் கிபி 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய அரசு காலத்தில் அறிமுகமானது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா
அதாவது சாம்பார் முதன் முதலாக (11 மார்ச் 1689) தஞ்சாவூரில் மராட்டிய ஆட்சியை நிறுவியவரான பேரரசு சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பா அல்லது சாம்பாஜிக்கு எகோஜியின் மகன் ஷாஹாஜியினால் விருந்து அளிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு புதிய உணவு பரிமாறப்பட்டது.
அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் சாம்பாஜிக்காக சமைக்கப்பட்ட உணவு என்பதால் அவரின் பெயரை வைத்து சாம்பார் என்று அழைக்கப்பட்டது.இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |