Why Not to Eat Curd at Night
நாம் அனைவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒருநாளைக்கு மூன்று வேலை நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் நம்முடைய உடலுக்கு ஆகாத உணவுகளும் உள்ளது. அதேபோல் நம்முடைய உடல் சூட்டினை அதிகரிக்கூடிய உணவுகளும் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் நம் வீட்டில் தினமும் பால், தயிர் மற்றும் நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை அதிகமாக சாப்பிட சொல்லுவார்கள். ஏனென்றால் இது போன்றவற்றை நாம் சாப்பிடுவதனால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும் என்பது ஒரு காரணமாக உள்ளது. ஆனால் இவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் பொருட்களில் இரவு நேரத்தில் மட்டும் தயிரை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று நிறைய நபர்களுக்கு தெரியாமல் உள்ளது. அதனால் இன்றைய Thinking பதிவில் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடகூடத்து என்பதற்கான காரணம் என்ன என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா..?
பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய பாலில் இருந்து தான் தயிர், மோர் மற்றும் வெண்ணெய் என இவற்றை எல்லாம் தயாரிக்கப்படுகிறது.
அதேபோல் தயிர் மற்றும் மோரில் எண்ணற்ற சத்துக்களும், உடலை குளிர்ச்சியாக வைக்கும் தன்மையும் இருப்பதால் நாம் அனைவரும் இதனை அன்றாட வாழ்க்கையில் சாப்பாட்டுடன் எடுத்து வருகிறோம்.
அதிலும் சிலர் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேலைகளிலும் தயிரினை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இவ்வாறு எடுத்துக்கொள்வதில் பெரும்பாலான நபர்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
அதாவது காலை, மதியம் தவிர இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா..? என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் தயிரை சாப்பிடக்கூடாது.
ஏனென்றால் நாம் சாப்பிடும் தயிரின் சுவை ஆனது புளிப்பு மற்றும் இனிப்பு சுவையில் தான் இருக்கிறது. அதனால் இதை நாம் இரவில் சாப்பிடுவதன் மூலம் இதனுடைய குளிர்ச்சி தன்மையானது நாசி பாதையில் சளி உருவாவதை அதிகரிக்கும். மேலும் சளி அதிகமானால் இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
அதோடு மட்டும் இல்லாமல் தயிர் செரிமானம் ஆகுவதற்கு வெகு நேரம் ஆவதால் சிலருக்கு செரிமான கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆகவே இரவு நேரத்தில் போதுமான அளவு தயிர் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா…அப்போ அதற்கு காரணம் இது தான்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |