சமையலறையில் உள்ள வேலைகளை ஈஸியா முடிக்கனுமா..? அப்போ இந்த டிப்ஸ் போதுமே..!

Advertisement

சமையலறை டிப்ஸ் | Easy Cooking Tips at Home in Tamil

பொதுவாக பெண்கள் அனைவரும் வீட்டிலும் வேலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இது பொதுவான ஒன்று தான். ஆனால் அந்த வேலைகளை ஈசியாக செய்து முடிக்க பல வழிகள் உள்ளன. அந்த வழிகளை எல்லாம் தெரிந்து கொண்டீர்கள் என்றால் உங்கள் வீட்டு வேலைகளை எளிதில் முடித்து விடலாம். பொதுவாக வேலைக்கு போகும் பெண்கள் அனைவரும் காலையில் அவசர அவசரமாக வேலையை பாதி செய்தும் பாதி செய்யாமலும் அப்படியே விட்டு சென்று விடுவார்கள். எனவே நீங்கள் வேலைகளை ஈசியாக முடிக்க இந்த சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சிகிட்டீங்கன்னா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் அந்த டிப்ஸ் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ்:

டிப்ஸ்: 1

முருங்கைக்கீரையில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான வீடுகளில், முருங்கைக்கீரையில் உள்ள காம்பை எடுத்து சமைப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடும் என்று இதை சமைக்கமாட்டார்ககள்.

ஆனால் அது அவ்வளவு கஷ்டம் இல்லங்க. நீங்கள் முருங்கை கீரையில் உள்ள பெரிய காம்புகளை மட்டும் நீக்கி விட்டு எடுத்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அந்த கீரை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அலசி கொள்ளுங்கள்.

இதை 5 நிமிடம் அந்த தண்ணீரிலே வைத்து விட்டு, பிறகு அதில் உள்ள கீரையை  எடுத்து விட்டு பார்த்தீர்கள் என்றால் சின்ன சின்ன காம்பு எல்லாம் அடியில் தங்கி இருக்கும். இதை நீங்கள் வடிகட்டி பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

டிப்ஸ்: 2

சமையலறை டிப்ஸ்

நாம் என்னதான் பார்த்து பார்த்து டீ போட்டாலும் அது அவ்வளவு சுவையாக இருக்காது. டீ சுவையாக இருக்க நீங்கள் வைத்திருக்கும் டீ தூளுடன் சிறிதளவு சுக்கு பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த டீ தூளில் டீ போட்டீர்கள் என்றால் டீ மிகவும் சுவையாக இருப்பது மட்டுமன்றி ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

குக்கர் பராமரிப்பு குறிப்புகள்..!

டிப்ஸ்: 3

 கிச்சன் டிப்ஸ்

வீட்டில் சாப்பிடுவதற்கோ அல்லது பாயாசம் செய்வதற்கோ உலர் திராட்சை வாங்கி வைத்திருப்பீர்கள். ஆனால் இது கொஞ்சம் நாளிலே பிசுபிசுப்பாக ஆகிவிடும். அப்படி ஆகாமல் இருக்க உலர் திராட்சையுடன் 1/4 டீஸ்பூன் அளவிற்கு அரிசிமாவு சேர்த்து கலந்து வைத்தீர்கள் என்றால் திராட்சை வீணாகாமல் இருக்கும்.

டிப்ஸ்: 4

 kitchen tips and tricks in tamil

வீட்டில் மதியம் வடித்த சாதம் மீதமிருந்தால் அதை வீணாக்காமல் இரவு சாப்பாட்டிற்கு ஏற்றவாறு சூப்பரா பயன்படுத்தலாம். மீதமுள்ள சாதத்தை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவு, 1ஸ்பூன் அரிசி மாவு,தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனுடன் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். அதன் பின் இதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து சப்பாத்தி சுடுங்கள். சப்பாத்தி டேஸ்டாகவும், சாப்டாகவும் இருக்கும்.

கிச்சன் எப்போதும் சுத்தமாக இருக்க இந்த குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க

 

டிப்ஸ்: 5

சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை நீங்க டீயை இப்படி போட்டு குடிங்க.!

முதலில் டீ போடுவதற்கு தேவையான தண்ணீர் சேர்த்து, அதனுடன் சிறிதளவு இஞ்சி, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொதிக்கவிடுங்கள். பிறகு அதில் டீ தூள் சேர்த்து  நன்றாக 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். 2 நிமிடம் கொதித்ததும் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் ஆரோக்கியமான டீ ரெடி.!

டிப்ஸ்: 6

 easy cooking tips for beginners in tamil

வீட்டில் உள்ள நல்லெண்ணெய் பாட்டிலில் சிறிதளவு வெல்லம் போட்டு வைத்தீர்கள் என்றால் நல்லெண்ணெய் தீரும் வரை வாசனையாக இருக்கும்.

டிப்ஸ்: 7

உங்கள் பிரிட்ஜை திறந்ததும் ஒரு வகையான ஸ்மெல் வரும். அந்த ஸ்மெல் வராமல் இருக்க, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் 1 ஸ்பூன் அளவிற்கு அரசி எடுத்து அதனுடன் ஏதாவதொரு எசென்ஸ் சேர்த்து கலந்து பிரிட்ஜில் ஒரு ஓரமாக வைத்தீர்கள் என்றால் வாசனையாக இருக்கும்.

 

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement