House Cleaning at Homemade
வீட்டை சுத்தம் செய்வது ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும். வீடு கட்டிய புதிதில் பளிச்சென்று இருக்கும். நாளடைவில் வீடு பழையது போல தோற்றமளிக்கும். வீட்டை கிளீன் செய்வதற்காக கடையில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி பயன்படுத்தும் போது வீடு புதிது போலவும் இருக்காது. அதனால் காசு செலவு செய்யாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
House Cleaning at Homemade:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குறிப்பு:1
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர், 3 தேக்கரண்டி மிளகுக்கீரை எண்ணெய், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, துணி துவைக்க பயன்படுத்தும் சர்ப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளவும்.
நீங்கள் இந்த கலவையை வீட்டு தரை மற்றும் கண்ணாடியை தவிர மற்ற பொருட்கள் அனைத்திலும் ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் கழித்து தேய்த்து துடைத்து விடலாம்.
வெறும் எலுமிச்சை பழம் மட்டும் போதும் வீட்டில் பூச்சிகள் எதுவும் வராமல் இருக்க..!
குறிப்பு:2
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளவும்.
நீங்கள் இந்த கலவையை வீட்டு தரை மற்றும் மர பொருட்களை தவிர மற்ற பொருட்கள் அனைத்திலும் ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் கழித்து தேய்த்து துடைத்து விடலாம்.
குறிப்பு:3
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் வெள்ளை வினிகர், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, லாவெண்டர் எண்ணெய் 1 தேக்கரண்டி, 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை அனைத்து பொருட்கள் மற்றும் தரைகள் அனைத்திலும் ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் கழித்து தேய்த்து துடைத்து விடலாம்.
குறிப்பு:4
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி வெள்ளை வினிகர், 1 தேக்கரண்டி மிளகு எண்ணெய், சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை கண்ணாடி மற்றும் கண்ணாடி சார்ந்த பொருட்களில் ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் கழித்து தேய்த்து துடைத்து விடலாம்.
என்னா சொல்றீங்க இதுமாதிரி வீட்டை சுத்தம் செய்தால் வெறும் 5 நிமிடம் போதுமா..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |