How To Clean Wet Grinder in Tamil
வீட்டில் மாவு அரைப்பது என்பதே பெரிய வேலை. மாவு அரைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். அதுமட்டுமில்லாமல் அதனை அரைத்து முடித்ததும் கிரைண்டரை உடனே கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். இல்லையென்றால் கிரைண்டரில் மாவு ஒட்டிக்கொண்டு காய்ந்து விடும். பிறகு அதனை சுத்தம் செய்வது மிகவும் கடினம். பொதுவாக நாம் கிரைண்டரை சாதாரணமாக தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவி சுத்தம் செய்வோம். என்னதான் நாம் அதிக தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தாலும் கிரைண்டரில் மாவு அரைத்த துருநாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். எனேவ இதனை தடுக்கக்கூடிய ஒரு அருமையான குறிப்பு ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து கிரைண்டரை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl |
How to Clean Wet Grinder Easily in Tamil:
டிப்ஸ் -1
நீங்கள் கிரைண்டரில் மாவு அரைத்து முடித்த பிறகு, முதலில் தண்ணீர் விட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.
பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கிரைண்டர் கழுவுவதற்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க விடுங்கள். இந்நிலையில் நீங்கள் பயன்படுத்தி விட்டு மீதம் இருக்கும் எலுமிச்சை பழத்தோலினை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
அதன் பின், அடுப்பை ஆஃப் செய்து விட்டு 20 நிமிடம் நன்றாக ஊறவிடுங்கள். பிறகு அத்தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் ஊற்றி கிரைண்டரை ஆன் செய்து ஒரு சுற்று சுற்றி விடுங்கள்.
அடுத்து, மீண்டும் ஒருமுறை வெறும் தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாத காட்டன் துணியினால் துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் கிரைண்டரில் உள்ள நுண்கிருமிகள் அழிந்து கிரைண்டர் சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்கும்.
கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!
டிப்ஸ் -2
மாவு அரைத்து முடித்ததும் கிரைண்டரை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு வினிகரை எடுத்து கொள்ளுங்கள்.
இவை இரண்டையும் நன்றாக கலந்து கிரைண்டரில் ஊற்றி கிரைண்டரை ஆன் செய்து ஒரு சுற்று சுற்றி பிறகு ஆஃப் செய்து விடுங்கள்.
மீண்டும் ஒருமுறை வெறும் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்து ஈரம் இல்லாத காட்டன் துணியினால் துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் கிரைண்டர் பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |