பாத்ரூம் அடைப்பை சரி செய்வது எப்படி!
பொதுவாக எல்லார் வீட்டிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த பாத்ரூம் அடைப்பு. அடைபட்ட வடிகால்களை நாம் அனைவரும் எரிச்சலூட்டுவதாகக் காண்கிறோம். நமது சிறு தவறுகளும், அலட்சியமும்தான் இதற்குக் காரணம். வீட்டில் உள்ள குளியல் தொட்டி, கழிப்பறை அல்லது சமையலறை Sink-ல் அடைப்பு ஏற்பட்டால் அது நமக்கு மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். எவ்வளவு தான் நாம் பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் சில முறை, வடிகாலில் அடைப்பு ஏற்படும். அது சந்தேகத்திற்கு இடமின்றி எரிச்சலை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனையை சரி செய்ய நிறைய முறையை பயன்படுத்துவார்கள். எளிய முறையில் எப்படி பாத்ரூம் அடைப்பை சரி செய்வது எப்படி அதாவது How to Fix a Bathroom Clog in Tamil என்பதை பற்றி முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Fix a Bathroom Clog in Tamil
இந்த பாத்ரூம் அடைப்பு என்பது அனைவர்க்கும் மிக சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். சில பொருட்களை வைத்து எப்படி பாத்ரூம் அடைப்பை சரி செய்வது என்பது பார்ப்போம்.
- முதலில் ஒரு பக்கெட் அல்லது கப்பில் நல்ல சூடான தண்ணியை ஊற்றிக்கொள்ளவும்.
- பின்பு அதில் Harpic-ஐ சிறிது ஊற்றவும்.
- அதில் ஆசிட் கலந்திருப்பதால் நன்கு பொங்கிவரும்.
- அதை கைவைக்காமல் ஒரு கரண்டி அல்லது குச்சை வைத்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- அதன்பிறகு பாத்ரூமின் வடிகாலில் ஒரு tissue paper வைத்து அதன் மேல் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சோடா உப்பை வைக்கவும்.
- பின்பு நாம் வைத்துள்ள தண்ணீரை அதன் மேலே ஊற்றவும்.
- tissue paper வைப்பதால் தான் தண்ணீர் மெதுவாக உள்ளேசென்று அந்த அடைப்பை சரிசெய்யும்.
துருப்பிடித்த பாத்ரூம் பைப்களை 10 நிமிடத்தில் பளிச் என்று மாற்ற என்ன செய்யலாம்
ஒரு பத்துநிமிடம் கழித்து நன்றாக தண்ணீரை ஊற்றிவிடவேண்டும். இவ்வாறு பயன்படுத்தினால் பாத்ரூம் அடைப்பானது சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |