வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தரையில் விழுந்த முட்டையை துர்நாற்றம் இல்லாமல் சுத்தம் செய்ய உப்பு ஒன்று போதும்..!

Updated On: November 11, 2024 11:42 AM
Follow Us:
how to get rid of broken egg smell on floor in tamil
---Advertisement---
Advertisement

How To Clean Broken Eggs Without Smell | How to Remove Egg Smell From Floor

நாம் வேலை செய்யும்போது சிலநேரம் தவறுதலாக பொருட்கள் கைதவறி கீழே விழுந்து விடும். இதனால் வீட்டில் பலபேரிடம் திட்டும் வாங்கி இருப்போம். அதிலும் குறிப்பாக மற்ற பொருட்களை விட எண்ணெய், முட்டை, கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை கீழே விழுந்து உடைந்தால் அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலை. முக்கியமாக, முட்டை விழுந்து உடைந்தால் அதன் நுர்நாற்றம் வீடு முழுவதும் வீசிக்கொண்டே இருக்கும். அதனை துடைத்து சுத்தம் செய்தாலும் முட்டை துர்நாற்றம் நீங்காமல் இருக்கும். ஆகையால், இப்பதிவின் வாயிலாக தரையில் விழுந்த முறையை எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக, முட்டையை சில பேர் சாப்பிட விடும்பமாட்டார்கள். ஏனென்றால் முட்டை அதிக நாற்றம் வீசக்கூடியது. ஆனால், முட்டையில் நம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டையை ஆம்லெட், பொரித்தல், அவித்தல், ஹாஃஆயில் என பலவிதமான முறைகளில் செய்து சாப்பிடுவார்கள். அதிலும் சில முட்டையை பச்சையாகவே உடைத்து குடிப்பார்கள். சமைத்த முட்டைகளை விட பச்சை முட்டை அதிக நுர்நாற்றம் வீசும். ஆகையால், வீட்டில் தரையில் முட்டை விழுந்து உடைந்தால் அதனை நாற்றம் இல்லாமல் எளிமையாக சுத்தம் செய்வது எப்படி என்பதை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How to Get rid of Egg Smell on the Floor in Tamil:

முட்டை துர்நாற்றம் நீங்க டிப்ஸ்:

 how to remove egg smell from floor in tamil

உப்பு:

முட்டை தரையில் விழுந்து உடைந்தால் அதனை நாற்றம் இல்லாமல் சுத்தம் செய்ய உப்பினை பயன்படுத்தலாம். அதாவது, உடைந்த முட்டையின் மேல் உப்பினை தூவி தண்ணீர் ஊற்றாமல் துடைத்து எடுத்தால், முட்டை வாடையும் நீங்கி விடும். தரையும் சுத்தமாகிவிடும்.

 how to remove broken egg smell from floor in tamil

பேக்கிங் சோடா:

நாம் அனைவரும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று பேக்கிங் சோடா. பேக்கிங் சோடா கொண்டு பல்வேறு பொருட்களை சுத்தம் செய்யலாம். அந்த வகையில், முட்டையை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடா பயன்படுகிறது. அதாவது 1 கப் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து முட்டை விழுந்த இடத்தில் துடைத்து விடுங்கள். மீண்டும், ஒரு முறை இறுதியாக வெதுவெதுப்பான நீர் கொண்டு துடையுங்கள்.

 remove egg smell from floor in tamil

வினிகர்:

முட்டை நாற்றத்தை போக்குவதற்கு வினிகர் பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் வினிகர் மற்றும் தண்ணீரை 1:1 என்ற விகிதத்தில் கலந்து துணியினை கொண்டு முட்டை விழுந்த இடத்தில் துடைத்து எடுக்க வேண்டும். அடுத்து, வெதுவெதுப்பான நீர் கொண்டு துடைக்கவும்.

டிட்டர்ஜென்ட்:

வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் டிட்டர்ஜென்ட் கொண்டு முட்டை நாற்றத்தை நீக்கலாம். 1 கப்பில் டிட்டர்ஜென்ட் பவுடர் அல்லது சோப்பு எடுத்து கொள்ளுங்கள். இதனை நன்கு கலந்து முட்டை உடைந்த இடத்தில் அப்ளை செய்து துடைத்து விடுங்கள்.

மேற்கூறியுள்ள குறிப்புகள் அனைத்தும் முட்டையின் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை