வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்டுல உள்ள கிரைண்டர் ரிப்பேர் ஆகாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டுமா..?

Updated On: May 30, 2023 9:21 AM
Follow Us:
how to maintenance grinder tips in tamil
---Advertisement---
Advertisement

How to Maintenance Grinder Tips 

இன்றைய காலத்தை பொறுத்தவரை அனைவருடைய வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் மற்றும் மின்விசிறி என இவை அனைத்தும் இருக்கிறது. இதுமாதிரியான பொருட்கள் வந்ததால் நம்முடைய கைகளுக்கான வேலை மற்றும் நேரம் என இந்த இரண்டும் குறைந்து கொண்டே போகிறது. அதுமட்டும் இல்லாமல் காலையில் வேலைக்கு செல்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. ஆனால் இவற்றை பயன்படுத்துவது என்னவோ எளிமையாக இருந்தாலும் கூட ரிப்பேர் ஆகாமல் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் சிலரது வீட்டில் பார்த்தால் கிரைண்டர் மற்றும் மிக்சி இவை வாங்கிய சில மாதங்களிலே துரு பிடித்து மற்றும் விரைவில் பழுது அடைந்து விடுகிறது. அதனால் இன்று கிரைண்டர் சீக்கிரம் பழுது அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கிரைண்டர் பராமரிப்பு:

அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது:

கிரைண்டரில் மாவு அரைத்த பின்பு அதில் தண்ணீர் ஊற்றி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கிரைண்டரில் நீண்ட நேரம் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு பின்பு சுத்தம் செய்வதால் கிரைண்டரின் மோட்டார் ஆனது விரைவில் பழுது அடைந்து விடும்.

மேலும் கிரைண்டரை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த உடன் ஒரு ஈரம் இல்லாத காட்டன் துணியால் துடைத்து கொள்ள வேண்டும்.

வோல்டேஜ் குறைவாக இருத்தல்:

நாம் கிரைண்டரில் மாவு அரைக்க வேண்டும் என்றால் வோல்டேஜ் குறைவாக இருக்கும் போது மாவு அரைப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை குறைவான வோல்டேஜில் மாவு அரைத்தால் உங்களுடைய வீட்டில் உள்ள கிரைண்டர் ஆனது கூடிய விரைவில் பழுது அடைந்து விடும்.

கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!

மாவு அரைத்தவுடன் சுத்தம் செய்தல்:

அனைவரும் செய்யும் ஒரு தவறு என்னவென்றால் கிரைண்டரில் மாவு அரைத்தவுடன் அதில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது தான். ஆனால் இவ்வாறு செய்யவே கூடாது. ஏனென்றால் கிரைண்டரில் மாவு அரைப்பதனால் அதில் உள்ள மோட்டார் ஆனது வெப்பநிலையில் இருக்கும். இத்தகைய நிலையில் இருக்கும் போது அதில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால் கிரைண்டர் பழுதடைய தொடங்கும்.

சுத்தம் செய்தல்:

வாரம் ஒரு முறை சரியான முறையில் கிரைண்டரை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தும் செய்யும் போது அதில் உள்ள ஒயர் மற்றும் மோட்டாரில் தண்ணீர் எதுவும் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். வாரம் 1 முறை சுத்தம் செய்தால் தான் கிரைண்டர் துரு பிடிக்காமல் இருக்கும்.

மேலும் கிரைண்டரில் உள்ள ஒயர்களை எலி எதுவும் நறுக்காத அளவிற்கு பார்த்து கொண்டு பராமரித்து வர வேண்டும்.

கிரைண்டர் கழுவும்போதும் இதை மட்டும் கலந்து கழுவி பாருங்க.. கிரைண்டர் பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.. 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now