House Floor Liquid Home Preparation
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீட்டில் டைல்ஸ் தரை தான் உள்ளது. இதனை சுத்தம் செய்வதற்கு கடையில் விற்கும் LIQUID-களை தான் பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தினாலும், தரையில் அழுக்குகள் நீங்காது. அதனால் வீட்டிலேயே LIQUID தயாரித்து அதை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
LIQUID தயாரிக்க தேவையான பொருட்கள்:
- வெண்ணீர் -2 கப்
- வினிகர் – 1/2 கப்
- பாத்திரம் தேய்க்கும் LIQUID – 3 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதனை ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் சேர்த்து மூடி போட்டு பாட்டிலை குலுக்கவும்.
இந்த LIQUID-யை வாளியில் தண்ணீர் சேர்த்து அதில் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதை பயன்படுத்தி வீட்டை துடைக்கவும். இந்த LIQUID பயன்படுத்துவதால் வீடு வாசமாகவும், தரையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
LIQUID தயாரிக்க தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – 4 தேக்கரண்டி
- வெள்ளை வினிகர் -1/4 கப்
- தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒரு கப்பில் ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த LIQUID-யை சிறிதளவு ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு மாப்பை இந்த LIQUID-யில் நனைத்து வீட்டை துடைக்கவும்.
பெண்களே வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க
குளியலறை தரையை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
- போராக்ஸ்- 1/4 கப்
- சூடான நீர் – 1 கப்
பயன்படுத்துவது எப்படி.?
1 கப் சூடான தண்ணீரில், போராக்ஸ் 1/4 கப் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாத்ரூம் தரையில் தெளித்து 15 நிமிடத்திற்கு ஊற விடவும். 15 நிமிடம் கழித்து வார்கொல் பயன்படுத்தி தேய்த்து கழுவி கொள்ளவும்.
சிமெண்ட் தரையை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு- 1/4 கப்
- சூடான தண்ணீர்- 1 கப்
பயன்படுத்துவது எப்படி.?
ஒரு வாளியில் சொந்த தண்ணீர் 1 கப் சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு 1/4 கப் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தரை முழுவதும் தெளித்து விட்டு வரக்கோலை வைத்து தேய்த்து 10 நிமிடத்திற்கு ஊற விடவும். பிறகு தண்ணீரை ஊற்றி அலசினால் தரை பளிச்சென்று இருக்கும்.
வீடு துடைக்க கஷ்டமா இருக்கா..! இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க இனி கஷ்டமே இருக்காது
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |