கார்த்திகை தீபத்திற்கு தண்ணீரில் இந்த ட்ரிக் ட்ரை செய்து விளக்கு ஏற்றுங்கள்..!

Advertisement

How to Make Water Lamp at Home in Tamil

இன்னும் சில நாட்களில் கார்த்திகை தீபம் வரப்போகிறது. இந்த கார்த்திகை தீபத்திற்கு முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாள் வீட்டின் வாசலில் இந்துக்கள் தீபம் ஏற்றுவார்கள். இந்த மூன்று நாளும் இரவில் ஒவ்வொருவரின் வீட்டு வாசலை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை விளக்கேற்றும் போதும் இங்கு சொல்லப்பட்டிருக்கும் ட்ரிக்கையும் உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். என்ன ட்ரிக் அப்படின்னா தண்ணீரில் விளக்கு ஏற்றும் முறை தான். தண்ணீரில் விளக்கு எப்படி ஏற்ற முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கும் ஒரு ட்ரிக் இருக்கிறது அந்த ட்ரிக்கை சரியாக செய்தால் நம்மால் தண்ணீரில் அழகாக மற்றும் கலர் கலராக விளக்கு ஏற்ற முடியும். சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கிளாஸ் பவுல் அல்லது டம்ளர் – 5 அல்லது அதற்கும் மேல் உங்களின் விருப்பத்திற்கேற்ப
  2. திரிநூல் – தேவையான அளவு
  3. விளக்கேற்றும் எண்ணெய் – சிறிதளவு
  4. கலர் பொடி – உங்களுக்கு விருப்பமான கலர்
  5. பாலிதீன் கவர் – சிறிதளவு
  6. எசன்ஷியல் ஆயில் – உங்களுக்கு பிடித்த வாசனையில் ஏதாவது ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள்.

தண்ணீரில் விளக்கு ஏற்றும் முறை – How to Make Water Lamp at Home in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் ஒரு கிளாஸ் பவுலையோ அல்லது கிளாஸ் டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

அதில் முக்கால் அளவு நிரம்பும் வரை தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

தண்ணீர் ஊற்றிய பிறகு உங்களுக்கு பிடித்த நிறங்களில் அதில் கலர் பொடி சேர்த்து லேசாக கலந்துவிடுங்கள்.

ஸ்டேப்: 4

கலர்பொடி சேர்த்த பிறகு விளக்கேற்றும் எண்ணெய்யை அந்த பவுலில் ஒரு லேயர் வரும் அளவிற்கு ஊற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

பிறகு உங்களுக்கு பிடித்த எசன்ஷியல் ஆயிலை இரண்டு சொட்டு அந்த பவுலில் ஊற்றிவிடுங்கள். இது எதற்கென்றால் விளக்கு எரியும் போது அதில் இருந்து ஒரு விதமான வாசனை வரும். அது உங்கள் வீட்டை நறுமணத்துடன் வைத்துக்கொள்ளும்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
இந்த பூஜை அறை டிப்ஸ் மட்டும் தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி.!

ஸ்டேப்: 6

பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு கவரை எடுத்துக்கொள்ளுங்கள், பவுலில் உள்ள தண்ணீரில் மிதக்கும் அளவுக்கு சிறிய அளவில் வட்டமாக வரைந்து கத்தரி கோலை பயன்படுத்தி வட்டமாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 7

 

வட்டமாக நறுக்கிய கவரை நாளாக படித்து மேல் படத்தில் காட்டியுள்ளது போல் நடுப்பகுதியில் சிறிய அளவில் கட் செய்துகொள்ளுங்கள். ரொமப பெரிதாக கட் செய்திட கூடாது.

ஸ்டேப்: 8

எதற்கு கவரின் நடுவில் கட் செய்ய வேண்டும் என்றால், அதில் நாம் திரிநூல் விட்டு விளக்கு ஏற்றுவதற்கு தான். ஆக அதில் இப்பொழுது திரிநூலை விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 9

திரிநூலை ஓட்டையில் விட்ட பிறகு, திரிநூலின் இருபக்கமும் நன்றாக விளக்கேற்றும் எண்ணெய்யை தடவிக்கொள்ளுங்கள். பிறகு ஒரு பக்கம் மட்டும் விளக்கேற்ற தேவைப்படும் அளவிற்கு திரிநூலை இழுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 10

பிறகு நறுக்கிய கவரை அதாவது திரிநூல் அதிகம் உள்ள  பக்கத்தை பவுலின் அடிபக்கமும், விளக்கேற்ற தேவையான அளவு இழுத்து வைத்திருக்கும் பகுதியை மேல் பக்கமும் இருக்கும் படி கவரை பவுளிற்குள் வைக்கவும். பிறகு நீங்கள் விளக்கேற்றலாம்.

இந்த தீபம் ஏற்ற அதிகம் எண்ணெய் தேவைப்படுது, வீடும் நறுமணமாக இருக்கும். மேலும் விளக்கும் நீண்டநேரம் எரியும். ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
பூஜை அறை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement