How to Manage Your Finances in Tamil
நாம் அன்றாட வாழ்க்கையில் வீண் செலவுகளை அதிகம் செய்தோம் என்றால் அது நமது வீட்டின் பொருளாதாரத்திர்க்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டும் இல்லாமல். குடும்பத்தில் கணவன், மனைவி உறவையும் பாதிக்கலாம். ஆக எப்பொழுது வீட்டை நிர்வாகம் செய்யும் நபர்கள் நிதி விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சரி வாங்க வீட்டின் நிதிப் பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்கள் வீட்டின் நிதிப் பிரச்சனைகளை சரி செய்ய சில வழிகள்!
முதலில் வீட்டை நிர்வாகம் செய்யும் நபர்கள் வீட்டுக்கு என்ன விஷயங்கள் தேவை.. எது விஷயங்கள் தேவை இல்லை. எது வீண் செலவு, எது தேவையுள்ள செலவு என்று தெரிந்துகொள்ள வேண்டும். நிதி இலக்குகள் மற்றும் செலவு பழக்கங்கள் குறித்து தெளிவு காண வேண்டும். தேவையில்லாத செலவுகளை கண்டறிய வேண்டும்.
ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாரிக்கிறார்கள் என்றால் யாராவது ஒருத்தவான்களோட சம்பளத்தில் பாதி அளவிலாவது அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்திக்கு சேமிக்க வேண்டும். அதாவது சேமிப்பு, வரி சேமிப்பு திட்டமிடல், முதலீடு, கடன்கள் ஆகியவை தொடர்பாக திட்டமிடுதல் அவசியம்.
சேமிப்பில் கவனம் செலுத்துவதோடு, சேமிப்பை சரியாக முதலீடு செய்ய வேண்டும். பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் முதலீடு பலன் அமைவதும் முக்கியம்.
பணத்தை சேமிக்க பலவகையான முதலீட்டை திட்டங்கள் உள்ளது, குறிப்பாக ஷர்மார்கெட், மியூச்சுவல் பண்ட் இது போன்ற முதலீடு திட்டங்கள் உள்ளது. ங்குகளில் முதலீடு செய்ய அனுபவம் இல்லை எனில், மியூச்சுவல் பண்ட் வழியை நாடலாம்.
தங்க சேமிப்பு பத்திரம், இ.டி.எப்., வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அவசர கால தேவைகளை சமாளிப்பதற்கான நிதியும் கைவசம் இருக்க வேண்டும். இந்த வழிகள் எல்லாம் உங்கள் வீட்டின் நிதிப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தினமும் 1000 ரூ மேல் Share Market-ல் எளிதாக சம்பாதிக்கலாம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |