சமையலறை அலமாரிகளை வரிசையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள இத Try பண்ணுக…

Advertisement

முக்கியமான கிச்சன் டிப்ஸ்

இல்லத்தரசிகளுக்கு சமயலறையில் பெரும்பிரச்சனையாக இருப்பது இடம். எவ்வளவு பெரிய சமையலறையாக இருந்தாலும் நமக்கு இட பற்றாக்குறை இருப்பதாக உணருவோம். அதற்கு காரணம் அலமாரி பொருட்கள் சரியான இடங்களில் இல்லாமல் இருப்பதும். நாம் தேடும் பொருள் குறித்த நேரத்தில் நமக்கு கிடைக்காமல் இருப்பதால் தான். இந்த பிரச்சனைகளை நாம் சரியான வழிகளில் கையாண்டால் கண்டிப்பாக அதற்கும் தீர்வு உண்டு.

இல்லத்தரசிகளின் உலகம் சமையலறை தான். சமையலறையில் செய்ய வேண்டிய வேலைகளை ஈசியாக செய்ய சில எளிய குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால், கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து விடலாம். அந்த வகையில் பெண்களின் வேலையை எளிமையாக்குவதற்கான ஒரு டிப்ஸை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

Kitchen Closet Organizer Ideas:

கிச்சன் டிப்ஸ்:

Tips 1:

நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் பொருட்களை உங்களுக்கு மிக அருகில் வைத்துக்கொள்ளுங்கள். பொருளின் தன்மைகளை பொறுத்து அவற்றை அடுக்கி வைத்தால், அவற்றை எடுத்து பயன்படுத்துவது எளிது.

அதாவது மசாலாக்களை ஒன்றாக அடுக்குங்கள். பருப்பு வகைகளை ஒன்றாக அடுக்குங்கள் இப்போது உங்களால் பொருட்களை ஈஸியாக எடுக்கவும் முடியும் தேடுவதற்கான நேரமும் குறையும்.

Tips 2:

சமையல் அறையில் திறந்த நிலையிலான அலமாரிகளை பயன்படுத்துவது சிறந்தது. இதன் மூலம் அலமாரி அடுக்குகளில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக பார்க்கவும், எடுக்கவும் முடியும். திறந்த அலமாரிகள் பெரியதாக இருப்பதால் இட பற்றாக்குறை ஏற்படாது.

Tips 3:

நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் கசிவு ஏற்படாத கண்ணாடி கொள்கலன்களை பயன்படுத்தாலம்.

கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவது சிறந்ததாக தோன்றவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த வகை பாத்திரங்களை பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் பயன்படுத்தும் பொருளின் பெயரை எழுதி பாத்திரத்தின் மேல் ஓட்டிவிடலாம். இதனால் உங்களில் நேரம் பாதுகாக்கப்படும்.

Tips 4:

கிச்சன் கவுன்டர் டாப் மற்றும் சுவற்றில் உள்ள அலமாரிகளில் மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை வைத்திருப்பது நமக்கு சிரமத்தை கொடுக்கும். அதனால் எப்போதாவது பயன்படுத்த கூடிய மைக்ரோவேவ் போன்றவற்றை பாதுகாப்பான கீழ் தளத்தில் வைத்துவிட்டு தேவைப்படும் போது மட்டும் எடுத்துபயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரஷர் குக்கரை இப்படி பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement