பிரஷர் குக்கர் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது ?
ஆரோக்கியமான சமையலுக்கும் அதே சமயம் நேரத்தை மிச்சப்படுத்தவும் குறைந்த எரிவாயுவை பயன்படுத்தி உணவை சீக்கரமாக சமைக்க உதவும் குக்கர் தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இப்போது எல்லா வீடுகளிலும் பிரஷர் குக்கர் ஒரு முக்கிய பொருளாக மாறிவிட்டது. மிக குறைந்த நேரத்தில் குறைந்த எரிவாயுவில் சமைப்பதால் மக்கள் அதிகம் இதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
என்ன தான் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தினாலும் பிரஷர் குக்கர்களை பயன்படுத்தும் போது சிலநேரங்களில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும். அந்த விபத்துகளை குறைக்க பிரஷர் குக்கர்களை சரியான விதத்தில் பராமரிக்க வேண்டும். நாம் பராமரிக்கும் விதம் சரியாக இருந்தால் விபத்துகள் இருக்காது. வாருங்கள் இன்றைய பதிவில் பிரஷர் குக்கர்களை எவ்வாறு பராமரிப்பது என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பிரஷர் குக்கர் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது ?
சமைப்பதற்கு முன்:
நீங்கள் சமைப்பதற்கு முன், பிரஷர் குக்கரை சரிபார்க்கவும். அதாவது பிரஷர் குக்கரில் உள்ள ரப்பர் கேஸ்கெட்டை வெடிக்காமல் அல்லது எந்த சேதமும் இல்லாமல் இருப்பதை உருதி செய்துகொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவி இருக்க வேண்டும். ஏதேனும் பழைய உணவு துகள்கள் போன்றவை உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.
பிரஷர் குக்கரை விளிம்புகளில் வெடிப்பு இருந்தால் ஆபத்தை ஏற்படுத்தும்.
சமையல் அளவு:
உங்கள் பிரஷர் குக்கர் கொள்ளளவை பொறுத்து அதற்கு ஏற்றவாறு சமைக்க வேண்டும். உங்கள் பிரஷர் குக்கரின் மூன்றின் இரண்டு பங்கு மட்டுமே சமைக்க வேண்டும். அதிகமாக சமைக்கும் போது வெடிக்கும் அபாயம் ஏற்படும். சிலவகை உணவுகள் பாதி இருக்குமாறு சமைக்க வேண்டும்.
சில நேரங்களில் அரிசி போன்றவை துவாரங்களை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதனால் பாதிவரை சமைப்பது சிறந்தது.
நீரின் அளவு:
உங்கள் சமையலுக்கு தேவையான தண்ணீரை சேருங்கள். நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு குறையும் போது அது வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீருடன் சமைக்க வேண்டும்.
நுரை வரும் உணவுகள் ஆவிகளை வெளியிடும் வால்வுகளை அடைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதனால் அவற்றை சமைக்கும் போது கவனத்துடனும் பிரஷர் குக்கர் கொள்ளவை விட குறைந்த அளவும் சமைக்க வேண்டும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |