இந்த டிப்ஸ் தெரிஞ்சா நீங்கள் தான் சமையல் ராணி | Useful Samayal Tips in Tamil

samayal kurippu tips in tamil

சமையல் குறிப்பு டிப்ஸ் | Samayal Kurippu Tips in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் பெண்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் சில சமையல் குறிப்பு டிப்ஸ்களை படித்து தெரிந்துகொள்ளலாம். இல்லத்தில் இருக்கும் இடங்களில் மிக முக்கியமான இடம் எதுவென்றால் அது சமையலறையாகும். இல்லத்தரசிகளின் பெரும்பாலான நேரம் சமையல் அறையிலும், சமையல் செய்வதிலுமே போய் விடும். சமையலறையில் செய்ய வேண்டிய வேலைகளை சுலபமாக்க சில எளிய குறிப்புகளை பெண்கள் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். அந்த வகையில் பெண்களின் வேலையை சுலபமாக்க சில பயனுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கிச்சன் டிப்ஸ்

டிப்ஸ்: 1 

 • Kitchen Tips in Tamil Language: சாம்பார் செய்யும்போது புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும். அவ்வளவு தான் சாம்பாரில் உள்ள புளிப்பு சுவை இப்போது குறைந்து சாம்பார் டேஸ்ட்-ஆக இருக்கும்.
 • சாம்பாரின் சுவையை அதிகரிப்பதற்கு குழம்பை இறக்கும்போது 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளலாம்.

டிப்ஸ்: 2

 • Samayal Kurippugal Kitchen Tips in Tamil: தேங்காய் ஓட்டில் இருந்து தேங்காயை தனியாக எடுப்பது சற்று கடினமான விஷயமாக இருக்கும். எனவே தேங்காயை கேஸ் அடுப்பின் மேல் வைத்து மீடியம் Flame-ல் வைத்து சூடாக்கவும். இடையில் தேங்காயை ஒரு இடுக்கி வைத்து திருப்பி விடவும்.
 • தேங்காய் முழுவதும் சூடாகி இருக்கும் பின் அடுப்பை அணைத்து ஆற விட்டு ஸ்பூன் வைத்து நெம்பினால் தேங்காய் தனியாக வந்துவிடும்.

டிப்ஸ்: 3

 • கிச்சன் டிப்ஸ்: பூண்டின் தொலை எடுப்பதற்கு நிறைய நேரம் தேவைப்படும். சீக்கிரமாக பூண்டு தொலை உரிப்பதற்கு முதலில் பூண்டை ஒவ்வொரு பற்களாக தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.
 • பின்னர் அந்த பூண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சூடான தண்ணீரை ஊற்றி 3 நிமிடம் ஊறவைக்கவும் மூன்று நேரம் கழித்து பூண்டை உரித்தால் ஈசியாக உரித்து விடலாம்.

டிப்ஸ்: 4

 • Samayal Kurippugal Tips: பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.

டிப்ஸ்: 5 

 • ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

டிப்ஸ்: 6 

 • Useful Kitchen Tips in Tamil: கடைகளில் போடுவது போல டீ சுவையாக இருப்பதற்கு டீ தூளில் Instant Cofee தூளை மிக்ஸ் செய்து கொள்ளலாம்.

டிப்ஸ்: 7 

 • எலுமிச்சம்பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.

டிப்ஸ்: 8

 • Kitchen Tips in Tamil Language: பிஸ்கட் நமத்து போகாமல் இருப்பதற்கு ஒரு பாட்டிலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 3 லவங்கம் சேர்த்து அதில் பிஸ்கட்டை போட்டு வைத்தால் நமத்து போகாது.

டிப்ஸ்: 9 

 • இட்லிக்கு அரைத்த மாவில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

டிப்ஸ்: 10

 • Kitchen Tips in Tamil Language: வெங்காய பக்கோடாவிற்கு மாவு செய்யும்போது அதில் வருத்த நிலக்கடலை பொடியை சேர்த்து மிக்ஸ் செய்தால் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும்.
20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Useful Information In Tamil