Nagam Sothai Tips
நாம் என்ன தான் காலத்திற்கு ஏற்றவாறு மார்டனாக மாறிக்கொண்டே போனாலும் கூட ஒரு சில விஷயங்கள் நடப்பது நடத்து கொண்டு தான் இருக்கிறது. முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளி, முடி உதிர்வு இதுபோன்ற பல பிரச்சனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பேருக்கும் இருக்கிறது. இதனை போலவே கை மற்றும் கால்களில் உள்ள நகத்தில் சொத்தை வருவதும் பிரச்சனையாக இருக்கிறது. இத்தகைய பிரச்சனை நிறைய பேருக்கு இருந்து வருகிறது. ஆனால் இதற்கான சரியான தீர்வு என்னவென்று சிலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆகவே நகத்தில் வரும் சொத்தையினை சரி செய்வதற்கான இயற்கை எளிய வழிகள் பற்றி இன்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
நகம் சொத்தை வர காரணம் :
கை மற்றும் கால்களில் பூஞ்சை தொற்று காரணமாக நகங்கள் சொத்தை அடைகிறது. இது காலப்போக்கில் சிறியதாக இருந்தாலும் அதன் பிறகு நகங்கள் சொத்தை அடைந்து கீழே விழுந்து விடும். ஆகையால் அதனை சரி செய்வதற்கான டிப்ஸினை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு தலை முடிக்கும் மட்டும் இல்லாமல் கை மற்றும் கால்களில் ஏற்படும் காயம் மற்றும் நகம் சொத்தை ஆகியவற்றையும் குணப்படுத்த செய்கிறது.
அதனால் தேங்காய் எண்ணெயினை அடுப்பில் 15 நிமிடம் சூடு செய்து சிறிது நேரம் ஆறவைத்து விடுங்கள். அதன் பின்பு இரவு கை மற்றும் கால்களில் நகம் சொத்தை ஏற்பட்டுள்ள இடங்களில் தடவினால் போதும் நகம் சொத்தை விரைவில் குணம் அடைந்து விடும்.
இதையும் படியுங்கள்⇒ கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தை நிமிடத்தில் மறைய வைக்கும் சில டிப்ஸ்..!
பூண்டு எண்ணைய்:
பூண்டு எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் இரத்த ஓட்டங்களை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆகையால் பூண்டு பல் 10 மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இரண்டினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயில் எடுத்துவைத்துள்ள ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டு இரண்டையும் நன்றாக அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அடுத்து தயார் செய்துள்ள எண்ணெய் ஆறியவுடன் அதில் இருக்கும் பூண்டினை மட்டும் வெளியே எடுத்துவிட்டு இரவு தூங்க செல்வதற்கு முன்பு இதனை நன்றாக சொத்தை ஏற்பட்டுள்ள நகங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்து விடுங்கள்.
இந்த எண்ணெய் நமது கை மற்றும் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து நகங்களில் உள்ள சொத்தையினை போக்கி நன்றாக வளர செய்யும்.
2 நிமிடத்தில் உதடு கருமை நீங்கி சிவப்பாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் C, இரும்புசத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் நகங்களில் உள்ள அழுகினையும் மற்றும் அதில் ஏற்படும் சொத்தையினையும் சரி செய்கிறது.அதனால் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு இரண்டையும் முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடுப்பில் ஒரு கடாயில் எடுத்துவைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக 15 நிமிடம் வரை கொதிக்க வைத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை இரவு படுக்க செல்வதற்கு முன்பு கை மற்றும் கால்களில் நகம் சொத்தை உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து மாசஜ் செய்து கொண்டால் போதும். ஒரு நாள் இரவில் நகத்தில் உள்ள சொத்தை மற்றும் அழுக்கு மறைந்து விடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |