UPI மூலம் பணம் அனுப்புபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

இனி UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணமா

Upi Money Transfer Tips in Tamil

நண்பர்களே வணக்கம்..! எதற்கு இந்த வணக்கம் என்றால் மக்களுக்கு யாருக்காவது பணம் அனுப்பவேண்டுமென்றால் உடனே வங்கிக்கு விடுமுறை எடுத்து அல்லது பர்மிசன் கேட்டு அதன் பின்பு வங்கிக்கு சென்று பணம் அனுப்பி வந்தோம். இன்றும் சிலர் வங்கிக்கு சென்று தான் பணம் அனுப்புகிறார்கள். ஆனால் தற்போது தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து வருவதால், நாம் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மாறி ATM அதன் பின்பு G PAY, Phone pay என்று நிறைய ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றோம். அதிலும் நாமும் நிறைய நபர்களுக்கு பண பரிவர்த்தனை செய்து வருகிறோம். அதேபோல் UPI மூலமும் பண பரிவர்த்தனை செய்து வருகிறோம். இதில் சில டிப்ஸ் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

UPI Money Transfer Tips in Tamil:

எதனால் இந்த ஆன்லைன் பரிவர்த்தனை வந்தது தெரியுமா..? இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

முதலில் மக்கள் அதிகமாக பணத்தை கையில் எடுத்து செல்லும் போது அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. பணம் திருடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ATM சென்று பணம் அனுப்புவதற்கு கஷ்டப்படுவார்கள். ஆகவே தான் இந்த UPI மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகிறது. ஆனால் இதன் மூலமும் கூட பணம் திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இதை தடுப்பதற்கு முக்கியமான சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்..!

டிப்ஸ்: 1

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு கால் செய்து நாங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம், போலீஸ் பேசுகிறோம் என்று சொல்லி உங்களின் வங்கி கணக்குகளை பற்றிய செய்திகளை உங்களுக்கு தெரிவிக்க கால் செய்து உள்ளோம் என்று சொல்லி உங்களிடமிருந்து OTP கேட்பார்கள். அப்போது நீங்கள் தெளிவாக பேசி அதனை OTP பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவேண்டும்..!

டிப்ஸ்: 2

உங்களுக்கு கால் செய்து KYC நோக்கத்திற்காக யார் என்பது தெரியாத நபர்கள் உங்களிடம் உங்களின் கம்ப்யூட்டர், போன் கேட்டால் அவர்களுக்கு எதனையும் உதவி செய்யும் நோக்கத்திற்காக கொடுக்காதீர்கள். அது உங்களின் வங்கி கணக்கை பற்றி தெரிந்துகொள்ள கேட்பார்கள். ஆகவே அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்..!

UPI விதிகள் திடீர் மாற்றம் அதில் ஒரு நாளுக்கு எவ்வளவு பணத்தை மற்றவர்களுக்கு மாற்ற விதிக்கலாம்

டிப்ஸ்: 3

அதேபோல் UPI IDயின் PIN அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள். ஒரே UPI பின் பயன்படுத்தினால், அதில் ஏதேனும் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் மற்ற நபர்கள் அதனை யோசிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும்.

டிப்ஸ்: 4

முக்கியமாக சிலர் அவசர தேவைக்காக பொது இடங்களில் இருக்கும் WIFI பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த நேரத்தில் UPI பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை போன்ற சில விஷயத்தை செய்ய வேண்டாம்.

UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்பவர்கள் இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil