பைக்கில் செல்லும் போது நாய் துரத்தினால் நாயிடம் இருந்து தப்பிக்க என்ன செய்யனும்னு தெரியுமா..?

Advertisement

நாய் துரத்துவது

பொதுவாக நாம் அனைவரும் வெளியில் செல்ல போகிறோம் என்றால் அதில் நிறைய வகையான சவால்களை சந்தித்து தான் ஆக வேண்டும். இதில் முதல் பிரச்சனை என்றால் நாய் துரத்துவது தான். நாம் வண்டியில் சென்றால் அல்லது நடந்து சென்றாலும் கூட தெருவில் இருக்கும் நாய் துரத்துகிறது. இப்படி துரத்தும் போது சிலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி பார்க்காமல் ஓடிவிடுவார்கள். ஆனால் இவ்வாறு ஓடும் போது தான் நாய் விடாமல் நம்மை துரத்திக்கொண்டே வரும். ஆகையால் ரோட்டில் செல்லும் நாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

What to Do if a Stray Dog Chases You:

டிப்ஸ்- 1

நாய் உங்களுடைய வண்டியினை பார்த்து வேகமாக கத்திக்கொண்டு துரத்துகிறது என்றால் அது உங்களுடைய வண்டியின் வீல் சுழலுவதை பார்த்து தான் துரத்துகிறது.

இவ்வாறு உங்களுக்கு நடந்தால் வண்டியினை கொஞ்சம் மெதுவாக ஓட்ட வேண்டும் அல்லது வண்டியினை நிறுத்திவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாய் துரத்தாமல் சென்று விடும்.

பன்றி வாகனத்தில் மோதினால் அந்த வாகனத்தை விற்க வேண்டுமா 

டிப்ஸ்- 2

அதுபோல நாய் விடாமல் துரத்துகிறது என்றால் முதலில் உங்களுடைய வண்டியினை நிறுத்திவிட்டு நீங்களும் வண்டியில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும்.

அதன் பின்பு நாய் பயப்படும் அளவிற்கு நீங்கள் ஏதாவது கல் அல்லது குச்சியினை வைத்து அச்சுறுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போதும் சில தெருநாய்கள் பயந்து ஓடிவிடும்.

டிப்ஸ்- 3

நாய் முதலில் உங்களுடைய வண்டியினை பார்த்து துரத்துகிறது என்றால் அதனை திரும்பி பார்த்து விட்டு வண்டியினை வேகமாக ஓட்ட கூடாது.

அதற்கு பதிலாக உங்களை நாய் துரத்துக்கிறது என்பதை உறுதி செய்தவுடன் திரும்பி பார்க்காமல் வண்டியின் வேகத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும். இவ்வாறு செய்வதிலும் நாய் துரத்துவதை நிறுத்தி விடும்.

இதையும் படியுங்கள்⇒ வாகனங்களில் போகும் பொழுது நாய்கள் துரத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா. 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement