வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய தோட்டங்கள்..!

Advertisement

உலகின் அழகிய தோட்டங்கள்..! Best Beautiful Garden in the World in Tamil

பலருக்கு இயற்கை காட்சிகளை ரசிப்பது மிகவும் பிடிக்கும். மரம், செடி கொடிகள் என இயற்கை காட்சிகளை காண விரும்புபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் நமது வாழ் நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய உலகின் அழகிய தோட்டங்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இயறக்கை காட்சிகளை அதிகம் விரும்பு நபர்கள் நீங்கள் என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள்.

புட்சார்ட் தோட்டம்:

 

இந்த புட்சார்ட் தோட்டம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரெண்ட்வுட் விரிகுடாவில் காணப்படுகிறது. இந்த புட்சார்ட் தோட்டம் ஒரு பிரபலமான தேசிய வரலாற்று இடமாக விளங்குகிறது. அயல் நட்டு பூச்செடிகள் உட்பட இங்கு 700-க்கும் மேற்பட்ட தாவரங்கள் இருக்கிறதாம்.

சட்டோ டி வில்லன்ட்ரி:

பிரான்ஸ் நாட்டின் இண்ட்ரோ-எட்-லோயரில் அமைந்துள்ள இந்த சட்டோ டி வில்லன்ட்ரி, சூரிய தோட்டம், நீர் தோட்டம், மூலிகை திட்டம் மற்றும் அழகிய திட்டம் என்று பலவகையான பகுதிகளை அடக்கிய இரு அழகான தோட்டம் ஆகும். இயற்கை காட்சிகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு ஒரு முறை செய்நறு வாருங்கள்.

ராயல் பொட்டானிக்:

ராயல் பொட்டானிக் தோட்டம் இலண்டன் அரசு குடும்பத்தால் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் அழகிய தோட்டம் ஆகும்.  இது ஒரு அழகிய மற்றும் உலக பாரம்பரிய தோட்டமாக இந்த ராயல் பொட்டானிக் தோட்டம் உள்ளது.

நோங் நூச் தாவரவியல் பூங்கா:

இந்த நோங் நூச் தாவரவியல் பூங்கா தாய்லாந்து நாட்டில் பட்டாயா எனப்படும் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த நோங் நூச் தாவரவியல் பூங்கா 600 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். மேலும் இந்த பூங்காவில் 650-க்கும் மேற்ப்பட்ட தாவரங்கள் வளர்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 3.6 ஹெக்டேர் நிலப்பரப்பை இந்த தோட்டம் பெற்றுள்ளது. மேலும் இந்த தோட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் காணப்படுகிறது.

ஜியார்டினி பொட்டானிக் வில்லா:

இந்த ஜியார்டினி பொட்டானிக் வில்லா தோட்டமானது டரன்டோவின் மிகவும் அழகிய தோட்டமாக அழைக்கப்படுகிறது. சுமார் 16 ஹெக்டேர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. அதேபோல் இந்த பூங்காவில் 20,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

லாங்வுட் கார்டன்ஸ்:

இந்த லாங்வுட் கார்டன்ஸ் பென்சில்வேயாவில் அமைந்துள்ள தோட்டம் ஆகும். இவற்றில் 40 வகையான அழகிய தோட்டங்களின் தொகுப்பாகும். சுமார் 4.5 ஏக்கர் கொண்ட இந்த தோட்டத்தில் 11000-க்கும் மேற்ப்பட்ட தாவரங்கள் இருப்பதாக கூறபடுகிறது.

கிளாட் மோனெட்டின் தோட்டம்:

கிளாட் மோனெட்டின் கனவு தோட்டம் ஆனது வடக்கு பிரான்சின் கிவர்னி கம்யூனில் அமைந்துள்ளது. பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் இந்த தோட்டம் அதன் அழகிய தோற்றம், கண்கவர் காட்சிகளுக்கு இந்த தோட்டம் பெயர் பெற்றது என்று சொல்லலாம்.

பாலைவன பூங்கா:

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் அமைந்துள்ள இந்த பாலைவன பூங்கா, ஒரு அழகிய தாவரவியல் பூங்கா அன்று அழைக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் 139-க்கும் மேற்பட்ட மேற்ப்பட்ட வறண்ட நில தாவரங்களின் வகைகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement