வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெயில் காலத்தில் ஜில்லுன்னு இருக்கிற இடத்திற்கு சுற்றுலா போகனுமா..! அப்போ இந்த இடத்திற்கு போங்க..!

Updated On: May 2, 2023 12:28 PM
Follow Us:
5 Best Tourist Places in Kerala in Tamil
---Advertisement---
Advertisement

5 Best Tourist Places in Kerala in Tamil

கோடை காலத்தில் தான் பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்வார்கள். காரணம் என்னவென்றால் அக்காலத்தில் தான் சுற்றிப்பார்க்க ஏதுவாக இருக்கும் அதுமட்டுமில்லாமல், குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை நாட்கள் என்பதாலும் அக்காலத்தில் தான் சுற்றுலா செல்வார்கள். அப்படி செல்லும் போது அனைவரும் குளிர்ச்சியான இடங்களுக்கு தான் செல்ல விரும்புவோம். அதுமட்டுமில்லாமல் இதுவரை செல்லாத இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைப்போம். எனவே நீங்கள் கேரளாவிற்கு சென்றால் அங்கு சுற்றிப் பார்க்க வேண்டிய அழகான குளிர்ச்சியான 5 இடங்கள் உள்ளன. அந்த அழகான இடங்கள் என்ன என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கேரளாவில் உள்ள 5 அழகான சுற்றுலா தலங்கள்:

வர்கலா கடற்கரை:

வர்கலா கடற்கரை

வர்கலா கடற்கரை ஆனது, கரடுமுரடான பாறைகள் மற்றும் அழகிய நீர்நிலைகள் உடைய இடமாகும். அதுமட்டுமில்லாமல், இக்கடற்கரையில் இப்போது டால்பின்கள் வருகை தந்துள்ளதால், அவற்றின் காட்சியோ மிக அருமையாக உள்ளது என்று மக்கள்  கூறுகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. 

மூணாறு:

மூணாறு

மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான மூணாறு, அதன் பரந்து விரிந்த தேயிலை தோட்டத்திற்கு புகழ் பெற்றது. இது பசுமையான சூழலில் நிறைந்து இருக்கும். அதுமட்டுமில்லாமல், உடலிற்கு புத்துணர்ச்சியும், குளுகுளு என்ற உணர்வையும் தருகிறது.

குமரகத்தின் உப்பங்கழி:

குமரகத்தின் உப்பங்கழி

கேரளாவின் பிரபலமான இடம் என்றால் அது பேகவாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழி தான். இது குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் கலவை ஆகும். இது தென்னை மரங்களால் சூழப்பட்ட குளிர்ச்சியான நீர்ப்பகுதியாகும். நீங்கள் இதில் படகு மூலம் பயணிக்கலாம். எனவே, போட் ஹவுஸ் செய்வதற்கு இது சிறந்த இடமாக இருக்கும்.

கொச்சி துறைமுகம்:

கொச்சி துறைமுகம்

கொச்சியின் மையத்தில் அமைந்துள்ள ஃபோர்ட் கொச்சிற்கு ஒரு பழமையான வரலாறு ஒன்று உள்ளது. இங்குள்ள பல கட்டிடங்கள் போச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட பகுதி ஆகும். எனவே கொச்சி துறைமுகம் சுற்றி பார்ப்பதற்கு ஏதுவான இடமாக இருக்கிறது.

இந்த Summer-க்கு டூர் போனுமா..! அப்போ எந்தந்த இடத்துக்கு போலானு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அதிரப்பள்ளி மர வீடுகளுக்கு பிரபலமான பகுதியாகும். இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடி உயரத்திற்கு மேல் இருந்து நீர் விழுகிறது. இது அழகான மூடுபனி போன்ற நீர்வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே நீர்வீழ்ச்சியின் அடிபகுதியில் இருந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now