திருமண நாள் வாழ்த்துக்கள் பைபிள் வசனங்கள்

Advertisement

Bible Verses for Wedding Anniversary in Tamil

இவுலகில் பல மாதங்கள் உள்ளது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக அவர்களுடைய திருமண சடங்கினை செய்வார்கள். அந்த வகையில் கிறிஸ்துவர்களின் திருமணமும் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் நண்பர்களில் கிருஸ்துவ நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய திருமண நாளை வாழ்த்துவதற்கு இங்கு சில திருமண நாள் வாழ்த்துக்கள் பைபிள் வசனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை உங்கள் கிருஸ்துவ நண்பருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை அனுப்பலாம்.

திருமண நாள் வாழ்த்துக்கள் பைபிள் வசனங்கள்:

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்
ஆதியாகமம் 9 : 7

Bible Verses for Wedding Anniversary in Tamil

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்
சங்கீதம் 118 : 24

Bible Verses for Wedding Anniversary in Tamil

உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு
நீதிமொழிகள் 5 : 18

குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குத் கிரீடமாயிருக்கிறாள்
நீதிமொழிகள் 12 : 4

 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையான தைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 18 : 22

புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
நீதிமொழிகள் 19 : 14

குணசாலியான ஸ்திரீயின் விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.
நீதிமொழிகள் 31 : 10

கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கபண்ணும்;
ஆபகூக் 3 : 2

அவர்களில் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.
மத்தேயு 19 : 6

நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
யோவான் 15 : 12

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷனுக்குங் கீழ்ப்படியுங்கள்.
எபேசியர் 5 : 22

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்;
எபேசியர் 5 : 25

உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்ககடவன்.
எபேசியர் 5 : 33

புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
1 பேதுரு 3 : 7

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;
எபிரேயர் 13 : 4

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 4 : 8

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement