செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Advertisement

செவ்வாழை பயன்கள் | Red banana benefits tamil

செவ்வாழை நன்மைகள் நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழை பழம். இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. இருப்பினும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.குறிப்பாக இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.இந்த செவ்வாழை பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, தையமின், ஃபோலிக் அமிலம் போன்ற உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. அதேபோல் நார்ச்சத்தும் இதில் அதிகம். இது உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. எனவே, நாம் அனைவருமே செவ்வாழையின் நன்மைகள் பற்றி தெரிந்துகொண்டு அதனை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Sevvazhai Pazham Benefits in Tamil:

Sevvazhai Pazham Benefits in Tamil

சிறுநீரக கற்கள் வராமல் இருக்க:-

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், சிறுநீரக கல் வராமல் இருக்க ஆசைப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதினால், செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும்.

எலும்புகள் வலிமையடைய:-

  • தினமும் செவ்வாழை சாப்பிடுவதினால் உடல் கால்சியம் சத்தை அதிகமாக எடுத்து கொள்கிறது அதனால் எலும்புகள் வலிமையடைகிறது.
  • எனவே எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள்.

 நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு:-

  • நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டால் உடலில் பலம் குறையும், இதனால் ஆண்மை குறைப்பாடு ஏற்படும்.
  • எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை இரவு தூங்கும் போது சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நரம்புகள் பலம் பெரும். ஆண்மை குறைவு பிரச்சனை சரியாகும்.

உடல் எடை குறைய:-

  • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. அனால் செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட மிக குறைந்த கலோரிகளே உள்ளது.
  • எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர, பசி அதிக நேரம் எடுக்காமல் இருக்கும் இதனால் உடல் எடையும் குறையும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க:-

  • நம் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இரத்த அணுக்களின் அளவை சிறக்க வைத்திருக்க வேண்டும்.
  • இதற்கு செவ்வாழை ரொம்ப உதவியாக இருக்கிறது. செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.

உடல் ஆற்றல் பெற:-

உடல் என்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள் உடல் என்றும் ஆற்றலுடன் இருக்கும். அதேபோல் புற்று நோய் நமக்கு வராமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

கண் பார்வை பிரச்சனைக்கு செவ்வாழை:-

  • மாலை கண் நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை பழம், ஒரு சிறந்த மருந்தாகும்.
  • எனவே பார்வை திறனில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர கண் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

செவ்வாழை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும்.

குறிப்பு:

சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பு தான் இந்த செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement