பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத பெயர்கள் | Girls baby names that should not use

Girls baby names that should not use

பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத பெயர்கள் | Girls baby names that should not use

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். குழந்தைக்கு நாம் வைக்கும் பெயர் தான், அந்த குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது. எனவே குழந்தைக்கு பெயர் வைக்கும் போதும் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, குறிப்பாக ஜாதகம் பார்த்து, எந்த எழுத்து முதல் எழுத்தாக எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று பல எண்ணங்கள் எழும்.. ஆனால் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்? எந்த பெயர்களை குழந்தைக்கு வைக்க கூடாது என்று யோசிப்பது இல்லை.

சரி இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கு என்னென்ன பெயர்களை (Girls baby names that should not use) வைக்க கூடாது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது கவனிக்க வேண்டியவை

பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது கவனிக்க வேண்டியவை?

மனிதர்களின் தர்ம சாஸ்திரப்படி பெண்களுக்கு சில பெயர்களை (Girls baby names) வைக்க கூடாது என்று முனிவர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது என்று தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம், தெரியாத பட்சத்தில் பெண் குழந்தைகளுக்கு எந்தமாதிரியான பெயர்களை வைக்கக்கூடாது என்று இங்கு தெரிந்து கொள்வோம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை
newவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..!
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020

பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத பெயர்கள்

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள், கஷ்டங்கள், இழப்புகள், ஏமாற்றங்களை  சந்தித்த பத்தினிகளின் பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாது அப்படி வைக்கும் போது, அந்த கஷ்டங்களை  இவர்களும் அனுபவிப்பார்கள் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றது.

Girls baby names that should not use – உதாரணத்துக்கு:-

சீதா, அகல்யா, திரௌபதி, அருந்ததி, இப்படிப்பட்ட பெயர்களை முடிந்தவரை பெண் குழந்தைகக்கு பெயராக (girl names to avoid) வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத மலைகளின் பெயர்கள்:

இதேபோல் சில மலைகளின் பெயர்களையும் பெண் குழந்தைகளுக்கு பெயராக வைக்க கூடாது என்று மனிதர்களின் தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Girls baby names that should not use – உதாரணத்திற்கு:-

விந்திய மலை என்பதை விந்தியா என்று பெயரை பெண் குழந்தைக்கு வைப்பார்கள். முடிந்தவரை மலைகளின் பெயர்களை பெண்களுக்கு பெயராக வைப்பதையும் தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத நதிகளின் பெயர்கள்:-

அதே போல் நதிகளின் பெயர்களையும் பெண் குழந்தைக்கு பெயராக வைக்கக்கூடாது என்று இந்து மத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Girls baby names that should not use – உதாரணத்திற்கு:-

கோதாவரி, சிந்து, சரஸ்வதி, கங்கா, யமுனா, காவேரி இப்படிப்பட்ட பெயர்களையும் பெண் குழந்தைக்கு பெயராக (girl names to avoid) வைப்பதை முடிந்தவரை தவிர்த்து கொள்ளுங்கள். நதிகளின் பெயரை பெண்களுக்கு வைப்பதினால் இறுதிவரை கன்னியராகவே இருந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இதில் அடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் (Girls baby names) தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஇஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2020
newபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020
newஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020
newபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..!
newஆண் குழந்தை சிவன் பெயர்கள் 2020
newகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020

பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத மலர்களின் பெயர்கள்

பெண் குழந்தைகளுக்கு மலர்களின் பெயர்களையும் வைக்கக்கூடாது என்பதும் இந்து மத சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மலர்களின் வாழ்நாள் என்பது, வாசம் வீசி ஓரிரு நாட்கள் மட்டுமே அதன் பிறகு அந்த மலரின் வாழ்நாள் முடிந்து விடும். எனவே முடிந்தவரை மலர்களின் பெயர்களையும் பெண் குழந்தைக்கு பெயராக (girl names to avoid) வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.

இயற்கைக்கு, இயற்கையாகவே அமைந்த பெயர்களில் இருக்கின்ற சக்தியும் அதன் தாக்கமும், அந்தப் பெயரை வைத்திருக்கும் (Girls baby names) பெண்களையும் தாக்கும் என்ற காரணத்தினால் தான் இந்த பெயர்களையெல்லாம் பெண் குழந்தைக்கு வைக்க கூடாது என்று மனித தர்ம சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

நமக்கு தெரிந்தவர்கள் இந்தப் பெயரை வைத்திருப்பவர்கள் அவர்களின் வாழ்க்கையிலும் கஷ்டப்பட்டு வருவதைக் கூட நாம் கண்கூடாகவே பார்த்திருப்போம்.

சரி நண்பர்களே பெண் குழந்தைகளுக்கு சில பெயர்களை வைத்தால் கஷ்டம் வரும் என்றுதெரிந்து கொண்டீர்களா சரி அந்த பெயர்களையெல்லாம் இனி வைக்காமல் தவிர்த்துக் (girl names to avoid) கொள்ளுங்கள், அர்த்தமுள்ள எத்தனையோ பெயர்கள் உள்ளது. அதில் எதையாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் அந்த பெயர் தங்கள் குழந்தையின் வாழ்க்கையை என்றும் மகிழ்ச்சியாக்கும்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் Girls baby names போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com