நாய்களுக்கு எந்தந்த மாதத்தில் எந்த தடுப்பூசி போடவேண்டும் தெரியுமா.?

dog vaccination schedule in tamil

நாய்களுக்கு தடுப்பூசி

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நாய்களுக்கான  தடுப்பூசி போடும் முறைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். உங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களை எப்படி ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் பார்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு வீட்டுல் உள்ளவர்களுக்கு எந்தவிதமான நோய்களின் தாக்கங்களும்  இருக்காது.

பொதுவாகவவே செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதற்கு என்ன சாப்பிட  தருவது, அதை எப்படி பார்த்துக்கொள்வது என்று இருப்பார்கள், ஆனால் அதனுடைய உடல் ஆரோக்கித்திற்கு தேவையான தடுப்பூசிகளை பற்றி தெரிந்து கொள்ளமல் இருப்பார்கள். நாய்க் குட்டிகள் பிறந்த பிறகு அவை வளரும் வரை அதற்கு மாத தடுப்பூசி முறைகள் இருக்கிறது, அவற்றை எப்போது நாய்களுக்கு போட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்  வாங்க.

நாய் குட்டிகளை பராமரிக்க சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

நாய்களுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?

பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் தாய் நாய்களுக்கு சரியான முறையில் தடுப்பூசிகள் போடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும், ஏனென்றால் தாய் நாயின் குட்டிகள் பால் ஊட்டும் பொழுது அந்த குட்டிகளுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாமல் இருப்பதற்காக நாய்குட்டிகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன, அதோடு மட்டுமல்லாமல் நாய்களை தூரமாக அழைத்து செல்லும் பொழுது அதற்கு எந்த ஒரு நோய்கிருமிகளும் அட்டாக் செய்யாமல் இருப்பதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதற்காகவும், நாய்களின் ரோமங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் எந்த நாட்களில் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை பற்றி அட்டவணை முறையில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நாய் தடுப்பூசி அட்டவணை:

தடுப்பூசி போட வேண்டிய நாட்கள் செலுத்த வேண்டிய தடுப்பூசி 
நாய்க்குட்டிகள் பிறந்த நான்காவது வாரம் (28 நாட்கள்) பிறகு Nobivac Puppy DP தடுப்பூசி
நாய்க்குட்டிகள் பிறந்த எட்டாவது வாரம் ( 56 நாட்கள்) பிறகு Nobivac DHPPi தடுப்பூசி 
நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம்(70 முதல் 90 நாட்களுக்குள்)Nobivac DHPPi (Booster Dose)
நாய்க்குட்டிகள் பிறந்த 12 வது வாரம் (90 நாட்கள்) பிறகு  Anti Rabies Vaccine (ARV) தடுப்பூசி 
நாய்குட்டிகளுக்கு ஒவ்வொரு வருடமும் போட வேண்டிய தடுப்பூசி  NOBIVAC DHPPi மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகள் 
டிஸ்டம்பர் மற்றும் பார்வோ நோயைத் தடுக்க.
Nobivac Puppy DP தடுப்பூசி 

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News