வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மோல் விலங்கு பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

Updated On: January 26, 2024 11:41 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mole Animal in Tamil

இந்த உலகில் ,மனிதர்களுடன் சேர்ந்து வாழும் அனைத்து உயிரினங்களின் மீது மனிதர்கள் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்போம். அதேபோல் தான் விலங்குகளின் மீது நாம் மிகவும் பாசம் வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக ஒரு சில விலங்குகளின் மீது மிகுந்த பாசம் வைத்திருப்போம். அதனால் அவற்றை நமது வீடுகளை வைத்து வளர்த்து அதற்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்வோம். அதேபோல் ஒரு சில காட்டு விலங்குளை பார்க்கும் பொழுதும் நமக்கு அவற்றை மிகவும் பிடிக்கும்.

ஆனால் அவற்றை நம்முடன் வைத்து வளர்க்கமுடியாது. அதனால் அவற்றை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோம். எனவே தான் இன்றைய பதிவில் மோல் விலங்கு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

ஓநாய்கள் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்

Mole Animal Details in Tamil:

Mole Animal Details in Tamil

மோல் என்பது தல்பிடே என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு நிலத்தடி வாழ் பாலூட்டி ஆகும். இவை பொதுவாக அவை உருளை வடிவ உடல்கள், வெல்வெட் ஃபர், மிகச் சிறிய, தெளிவற்ற கண்கள் மற்றும் காதுகள், சிறிய பின்னங்கால்கள் மற்றும் தோண்டுவதற்கு ஏற்ற பெரிய பாதங்களைக் கொண்ட குறுகிய, சக்திவாய்ந்த முன்கைகள் ஆகியவற்றைக் கொண்டு காணப்படும்.

இனம்:

இந்த மோல் விலங்கில் பல துணை இனங்கள் உள்ளது. அதாவது ஸ்கலோபினே, கான்டிலூரினி, காண்டிலூரா, ஸ்காலோபினி, அல்பிஸ்காப்டுலஸ், பாராஸ்கலோப்ஸ், ஸ்காலோபஸ், ஸ்காபானுலஸ், ஸ்காபானஸ், டல்பினே, தேஸ்மானினி, ரஷ்ய டெஸ்மேன்  மற்றும் பைரனியன் டெஸ்மேன் ஆகியவை தான் மோல் விலங்கின் துணை இனங்கள் ஆகும்.

வரிக்குதிரை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா

வாழ்விடம் மற்றும் வாழ்க்கை முறை:

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மோல் விலங்கு காணப்படுகின்றன. இவை பொதுவாக மண்தரையில் குழிகளை தோண்டி அதன் உள்ளே வாழ்கின்றன.

அதேபோல் இவை பிப்ரவரி முதல் மே வரை உள்ள காலங்களில் தான் தங்களது இனப்பெருக்கத்தை செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் தோராயமாக 42 நாட்கள் ஆகும். முக்கியமாக மார்ச் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் மூன்று முதல் ஐந்து குட்டிகள் பிறக்கின்றன.

உணவுமுறை:

இவை பொதுவாக நிலத்தடியில் வாழ்கின்றது என்பதால் நிலத்தடியில் காணப்படும் மற்ற முதுகெலும்பற்ற விலங்குகளான மண்புழு போன்றவற்றை தான் தனது உணவாக எடுத்து கொள்கின்றது.

குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now