Sloth Animal in Tamil
இந்த உலகில் ,மனிதர்களுடன் சேர்ந்து வாழும் அனைத்து உயிரினங்களின் மீது மனிதர்கள் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்போம். அதேபோல் தான் விலங்குகளின் மீது நாம் மிகவும் பாசம் வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக ஒரு சில விலங்குகளின் மீது மிகுந்த பாசம் வைத்திருப்போம். அதனால் அவற்றை நமது வீடுகளை வைத்து வளர்த்து அதற்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்வோம். அதேபோல் ஒரு சில காட்டு விலங்குளை பார்க்கும் பொழுதும் நமக்கு அவற்றை மிகவும் பிடிக்கும்.
ஆனால் அவற்றை நம்முடன் வைத்து வளர்க்கமுடியாது. அதனால் அவற்றை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோம். எனவே தான் இன்றைய பதிவில் அசையாக்கரடியை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
ஓநாய்கள் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்
Sloth Animal Details in Tamil:
அசையாக்கரடி என்பதை ஆங்கிலத்தில் Sloth என்று அழைப்பார்கள். இது நீண்ட நேரம் ஒரு இடத்தி அசையாமல் இருக்கும் என்பதாலும் மிக மிக மெதுவாக நகரும் என்பதாலும் இதனை அசையாக்கரடி என்பார்கள். அதேபோல் இதன் உடல் இயக்கமும் மிக மிக மெல்லவே இருக்கும்.
இவை பொதுவாக 60 முதல் 80 செமீ (24 முதல் 31 அங்குலம்) நீளமாகவும், இனத்தைப் பொறுத்து 3.6 முதல் 7.7 கிலோ (7.9 முதல் 17.0 பவுண்டு வரை) எடையுடனும் இருக்கும்.
இனம்:
இந்த அசையாக்கரடி என்பது செனார்த்ரான் பாலூட்டிகளின் நியோட்ரோபிகல் குழுவை சேர்ந்தது. இவற்றில் வெவேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்கள் உள்ளது. அதாவது மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட பிராடிபொடிடீ (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி ஒரு குடும்பம் ஆகும்.
அதேபோல் இருவிரல் கொண்ட மெகலோனிசிடீ (Megalonychidae) அசையாக்கரடி ஒரு குடும்பம் ஆகும். இவ்விரண்டில் மூவிரல் கொண்ட அசையாக்கரடியை விட இருவிரல் கொண்ட அசையாகரடி சற்று வேகமாக இயங்கும் மற்றும் சற்று பெரிதாகவும் காணப்படும்.
வரிக்குதிரை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா
வாழ்விடம் மற்றும் வாழ்க்கை முறை:
இந்த மூவிரல் மற்றும் இருவிரல் கொண்ட அசையாக்கரடி ஆகிய இரண்டு வகைகளும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் தான் வாழுகின்றன. பொதுவாக இவை மரத்தின் மீது தான் தனது வாழ்நாட்களை கழிக்கும். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை தனது கழிவுகளை கழிக்க தரையிறங்கும்.
மேலும் அதேபோல் ஒரு ஆண் அசையாகரடி ஒரே ஒரு பெண் அசையாகரடியுடன் மட்டுமே தனது வாழ்க்கையை வாழும். இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன. மூன்று விரல்கள் கொண்ட அசையாகரடிகள் 6 மாதகால கர்ப்பகாலத்தியும். இரண்டு விரல்கள் கொண்ட அசையாகரடிகள் 12 மாதகால கர்ப்பகாலத்தியும் கொண்டுள்ளன.
உணவு:
இந்த அசையாகரடிகள் பொதுவாக ஒரு தாவர உண்ணிகள் தான். ஆனால் இவை பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது.
அதேபோல் இவற்றின் இயக்கம் மிகவும் மெதுவாக இருப்பதால் இவை உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகுவதற்கு ஒரு மாதம் கூட ஆகும் என்று கூறப்படுகிறது.
குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |