நமக்கு தெரியாமலேயே வங்கியில் நமது வங்கி கணக்கில் இதற்கெல்லாம் காசு பிடிக்கிறாங்க! அது உங்களுக்கு தெரியுமா?

Advertisement

வங்கியில் எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா? – Bank charges list

பொதுவாக உலகில் பலவகையான வங்கிகள் உள்ளது. வங்கியை பொறுத்தவரை  கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது. இத்தகைய வங்கிகளில் பெருபாலானவர்கள் பலவகையான வங்கிகளில் கணக்கு திறந்து பயன்படுத்தி வருகின்றன. இத்தகைய வங்கிகளில் பெருபாலும் Account Maintenance Charges, Withdrawal and Remittance Charges, ATM Charges, Sufficient Fund (NSF) Charges, Late Payment Charges போன்ற பலவகையான பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிப்பது வழக்கம். நாம் ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு மற்றும் பணமறிமாற்றம் போற்ற பலவகையான பயன்படுத்துகின்றோம் வங்கி கணக்கு திறக்கின்றோம். அத்தகைய வங்கி கணக்கில் பலவகையான விஷயங்களுக்கு காசு பிடிக்கின்றன அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Bank fees and charges

No: 1

ECS Debit மற்றும் ECS Credit ஆகிய முறைகளுக்கு நமது வங்கி கணக்கில் இருந்து பணம் பிடிப்பார்கள். ECS Credit என்பது மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் சம்பளமோ அல்லது ஓய்வூதியமோ கிரிடிட் ஆகும். ECS Debit என்பது மாதம் மாதம் ஏதாவது EMI அல்லது லோன் கட்டுவது. இது ஆட்டோமேட்டிக்காக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது என்று வைத்துக்கொள்ளலாம். இதனை Auto Debit என்று சொல்வார்கள். இந்த சேவையை நீங்கள் எனேபிள் செய்து வைத்திருந்தால் அதற்கு வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

No: 2

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாத பட்சத்தில் Auto Debit ஆகாமல் இருந்தாலும். அதற்கும் வங்கியில் இருந்து கட்டணம் வசூலிப்பார்களாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 444 நாட்களில் Rs.1,48,770/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

No: 3

உங்கள் அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அதற்கும் வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

No: 4

நீங்கள் Auto Debit வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது தான். இருந்தாலும் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும், இருப்பினும் உங்களிடம் அந்த குறிப்பிட்ட தொகையை விட குறைவாகத்தான் இருக்கிறது என்றால். அவர்களுக்கு அந்த பணத்தை அனுப்ப முடியவில்லை என்றால் அதற்கும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

No: 5

உங்களுக்கு வங்கியில் இருந்து அனுப்பப்படும் மெசேஜிக்கும் வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

No: 6

வங்கியில் நீங்கள் ஸ்டேட்மென்ட் வேண்டும் என்று அதனை பிரிண்ட் அவுட்டாக கேட்டல். அந்த ஸ்டேட்மென்ட் எத்தனை பேஜ் உள்ளதோ அந்த ஒவ்வொரு பேஜிக்கும் தலா 20 ரூபனை வங்கியில் இருந்து வசூலிப்பார்கள்.

No: 7

ஸ்டேட்மென்ட் வேண்டாம் ஒரு வருடத்திற்கு வங்கி பாஸ் புக்கில் என்ட்ரி போட்டு கேட்குறீங்கன்னு வைத்துக்கொள்வோம். அதற்கு எத்தனை பாஸ் புக் வருமோ அந்த அத்தனை பாஸ் புக்கிற்கும் நீங்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும். ஏன் என்றால் வங்கி கணக்கு திறக்கும் போது ஒரு பாஸ் புக் கொடுப்பார்கள் அந்த ஒரு பாஸ் புக் மட்டும் தான் இனமாக வழங்குவார்கள். அதன் பிறகு உங்களுக்கு மேலும் பாஸ் புக் தேவைப்படுகிறது என்றால் நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ள வேண்டும்.

No: 8

உங்கள் ATM கார்ட் தொலைந்துவிட்டது புதிதாக ATM  கார்ட் என்றால் அதற்கும் கட்டணம் வசூலிப்பார்களாம்.

இது தவிர Debit cart, Credit கார்ட் Annual maintenance செய்வதற்கும் கட்டணம் வசூல் செய்வார்கள்.

ATM-யில் குறிப்பிட்ட நேரங்களுக்கு பிறகு பணம் எடுத்தால் அதற்கும் கட்டணம் வசூல் செய்வார்களாம்.

செக் புக் வாங்கிவிட்டு, அதனை வேண்டாம் என்று திரும்ப கொடுத்தால் அதற்கும் கட்டணம் வசூல் செய்வார்களாம்.

நீங்கள் ஒருவருக்கு செக் கொடுத்து அது பவுண்ட்ஸ் ஆனாலோ, ரிட்டன் ஆனால் அதற்கும் கட்டணம் வசூல் செய்வார்களாம். இவை அனைத்தயும் Cinsolidate Charge என்று சொல்வார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ICICI வங்கியில் 2 லட்சம் கோல்டு லோன் பெற்றால் 1 ஒரு வருடத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..?

இது தவிர வங்கியில் டாகுமென்ட் அல்லது நகைகளை அடகு வைக்க ஒரு லாக்கரை பயன்படுத்துவீர்கள் அல்லவா அந்த லாக்கருக்கும் கட்டணம் வசூல் செய்வார்களாம். மேலும் கூடுதலான தொழில்நுட்ப சேவைகளுக்கும் வங்கியில் கட்டணம் வசூல் செய்கின்றன.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement