இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு ஆவணங்கள் மற்றும் வட்டி பற்றி தெரியுமா.?

indian bank home loan details in tamil

Indian Bank Home Loan Interest Rate 2023

இன்றைய காலத்தில் பல காரணங்களுக்காக வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் கடன் வாங்குகிறார்கள். அப்டி வாங்கும் கடன்களில் வீட்டு கடனும் ஒன்று. பணக்காரர்களாக இருந்தாலும் சரி, நடுத்தரமாக இருந்தாலும் சரி சொந்தமாக வீடு கட்ட வேண்டுமென்றால் வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. இந்தியன் வங்கிகளில் வீட்டு கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள், தகுதி, வட்டி போன்றவற்றை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

வீட்டு கடன் பெறுவதற்கு தகுதிகள்:

வீட்டு கடன் பெறுவதற்கு 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் பெறுபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் 3 வருட பனி அனுபவம் இருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆவணங்கள்:

மாத சம்பளம் பெறுபவர்கள்:

 • அடையாள சான்று
 • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 • குடியிருப்பு முகவரி ஆதாரம்
 • வயது சான்று
 • கடந்த 6 மாத வங்கி அறிக்கைகள்
 • கடந்த 3 மாத சம்பள சீட்டுகள்
 • சொத்து தொடர்பான ஆவணங்கள்

சுயதொழில் செய்பவர்கள்:

 • அடையாள சான்று
 • குடியிருப்பு முகவரி ஆதாரம்
 • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 • வயது சான்று
 • கடந்த 6 மாத வங்கி அறிக்கைகள்
 • வணிக விவரங்கள்
 • வருமானம் மற்றும் இருப்புநிலைக் கணக்குடன் கூடிய லாபம் மற்றும் இழப்பு கணக்கு அறிக்கைகள்
 • வருமான வரி சான்று

எவ்வளவு கடன் வழங்கப்படும்:

இந்தியன் வங்கியில் 30 லட்சம் சொத்துக்களுக்கு வீட்டு கடன் தொகையில் 90% மற்றும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு 85% வரை கடன் வழங்கப்படுகிறது.

வட்டி:

வீட்டு கடன்:

எலைட் வாடிக்கையாளர்களுக்கு 15 லட்சம் அல்லது அதற்கு மேல் வாங்குபவர்களுக்கு 8.60% முதல் 8.85% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பொது வாடிக்கையாளர்களுக்கு 8.95% முதல் 9.15% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பிளாட் கடன்:

எலைட் வாடிக்கையாளர்களுக்கு 15 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 9.6% முதல் 9.85% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பொது வாடிக்கையாளர்களுக்கு 9.6% முதல் 9.85% வரை வட்டி வழங்கப்படுகிறது.

SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com