Indian Bank RD Interest in Tamil
இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இரக்கத்தை கண்டு தங்களின் எதிர்காலத்தில் இந்த பொருளாதார ஏற்ற இரக்கம் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் என்று நாம் அனைவருமே அறிந்த ஒன்று தான். அதனால் நாம் அனைவருமே தங்களின் எதிர்காலத்திற்க்காக சேமிக்க தொடங்கி விட்டோம். ஆனால் நம்மில் ஒருசிலருக்கு இன்னும் எந்த முறையில் சேமித்தால் தமக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்வதில் மிகுந்த குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக வங்கிகளில் எந்த மாதிரியான திட்டங்கள் உள்ளது அப்படி உள்ள திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகை சேமித்தால் உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும் என்பதையெல்லாம் அறிந்து கொண்டே வருகின்றோம். அதேபோல் இன்று இந்தியன் வங்கியின் RD திட்டத்தில் சேமிக்க தொடங்கினால் உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து இறுதியாக எவ்வளவு முதிர்வு கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank RD Interest Rates in Tamil:
வட்டி விகிதம்:
காலம் | General Citizen | Senior Citizen |
180 நாட்கள் | 4.00% | 4.50% |
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 4.00% | 4.50% |
9 மாதங்கள் முதல் 364 நாட்கள் வரை | 4.40% | 4.90% |
1 ஆண்டு | 5.00% | 5.50% |
1 வருடம் 1 நாள் முதல் 1 வருடம் 364 நாட்கள் வரை | 4.95% | 5.45% |
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை | 5.25% | 5.75% |
Indian வங்கியில் உள்ள கிரெடிட் கார்டுகள் என்னென்ன தெரியுமா
பொதுவாக இந்த RD திட்டத்தில் மாதமாதம் 100 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். அதேபோல் 6 மாதம் முதல் 10 வருடம் வரை சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும்.
உதாரணமாக இந்த RD திட்டத்தில் நீங்கள் மாதம் 1,000 ரூபாய் 10 வருடங்களுக்கு சேமிக்க தொடங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொழுது நீங்கள் ஒரு General Citizen-க இருந்தால் உங்களுக்கு 10 வருட முடிவில் 37,869 ரூபாய் வரை வட்டியாக கிடைக்கும்.
அதேபோல் 10 வருட முடிவில் 1,57,869 ரூபாய் வரை முதிர்வு தொகை கிடைக்கும். இதுவே நீங்கள் Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 10 வருட முடிவில் 42,206 ரூபாய் வரை வட்டியாக கிடைக்கும். அதேபோல் 10 வருட முடிவில் 1,62,205 ரூபாய் வரை முதிர்வு தொகை கிடைக்கும்.
36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |