SBI Home Loan 10 Lakh Interest Rate | 10 Lakh Home Loan EMI SBI
தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன கூறப்போகிறோம் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த முழு பதிவையும் படிக்க தொடங்குங்கள். நாம் இன்று SBI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI மற்றும் வட்டி எவ்வளவு இருக்கும் என்பதை பற்றி தான் இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
EMI Calculator in Tamil:
வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் என்பது அசல் தொகை, கடன் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் EMI, மாதாந்திர வட்டி மற்றும் மாதாந்திர குறைப்பு இருப்பைக் கணக்கிட உதவும் அடிப்படை கால்குலேட்டர் என்று சொல்லப்படுகிறது.
இந்த EMI Calculator மூலம் நாம் வங்கியில் எவ்வளவு வீட்டு கடன் பெறுகின்றோமோ அதற்கான வட்டி விகிதம், கடன் காலம் போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் இப்பொழுது வங்கியில் வீட்டு கடன் பெறுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதற்கு நீங்கள் மாதம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், நீங்கள் கடன் காலத்தில் திருப்பி செலுத்த வேண்டிய வட்டி மற்றும் கடன் காலத்தில் மொத்தமாக கட்டிய பணம் எவ்வளவு என்று இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
SBI வங்கியில் வழங்கும் வீட்டு கடன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்.. |
SBI Home Loan EMI Calculator in Tamil | SBI Home Loan Interest Rate Last 10 Years:
SBI வங்கியில் வீட்டு கடன் வட்டி விகிதம் 8.50% முதல் 10.15% வரை இருக்கிறது.
அதுபோல, நீங்கள் வீட்டு கடன் 10 லட்சம் பெறுகிறீர்கள் என்றால், 5 வருடம் மற்றும் அதன் வட்டி விகிதம் 8.50 சதவிகிதமாக இருந்தால் அதற்கான EMI 20,517 ஆக இருக்கும். அதுபோல 10 லட்சத்திற்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,30,992 ஆக இருக்கும். மேலும் 10 லட்சத்திற்கு நீங்கள் கடன் காலத்தில் கட்டிய மொத்தப் பணம் 12,30,992 ஆக இருக்கும்.
இந்தியன் வங்கியில் வணிக கடன் பெறுவதற்கு தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன..? |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |