சிறந்த சாகச புத்தகங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Adventure Books

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை தான் காண இருக்கின்றோம். மனிதனாக பிறந்த அனைவருமே புத்தகம் படிப்பதில் சிறந்தவராகவும் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். புத்தகம் படிப்பது என்பது ஒரு சிறந்த விஷயம் என்றே சொல்லலாம்.

சிலர் வேலை இல்லாமல் இருக்கும் நேரங்களில் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் தூங்க செல்லும் முன் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். புத்தகங்கள் படிப்பதால் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் சாகச புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..! 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Adventure Books in Tamil: 

1.  பனைமரச் சாலை – காட்சன் சாமுவேல்

பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல்

இந்த புத்தகம் ஒரு போதகரின் பனை மேலுள்ள விருப்பத்தால் நிகழ்ந்த ஒரு புனித பயணம் ஆகும். தான் பணி செய்யும் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியின் சாகசம் தான் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நம் கண்களிலிருந்து மறைந்து போன பனையும் பனை சார்ந்த கலாச்சாரமும் நினைவு கூறும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 

2. தருநிழல் – ஆர். சிவகுமார்

தருநிழல் - ஆர். சிவகுமார்

இந்நூல் ஆர். சிவகுமார் அவர்கள் எழுதிய முதல் படைப்பு ஆகும். ஆசிரியர் தனது இளம்பருவத்தின் தனி அனுபவங்களையும் சமூகப் பாடங்களையும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் மீளாமல் சென்றுவிட்ட அந்த நாட்களை இன்று நினைவு கூர்ந்து சொல்லும் போது தன்னை மிகையாகவும் சாகசமாகவும் இருக்கிறது என்று கூறுகிறது.

3. ஜின்களின் ஆசான் – ரமீஸ் பிலாலி

ஜின்களின் ஆசான் - ரமீஸ் பிலாலி

இந்த புத்தகம் இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை ஆகும். இந்த புத்தகத்தை ஒரு ஆன்மீக சாகச பயணம் என்றே சொல்லலாம். இந்த புத்தகத்தில் பல சாகச பயணங்கள், மர்மங்கள், மாயக் காட்சிகள் போன்றவை இடம் பெற்றுள்ளது.

மனதை அமைப்படுத்த இந்த புத்தகத்தை படியுங்கள்..!

4. ஆயிரம் ஊற்றுகள் – ஜெயமோகன் 

ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன் 

இந்த புத்தகத்தில் வரும் கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்ட கதைகள் ஆகும். இந்த புத்தகம் ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தமான விஷயங்களை கூறுகிறது.

5. யவனி – தேவி யசோதரன், சத்யப்பிரியன்

யவனி - தேவி யசோதரன், சத்யப்பிரியன்

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்த நாவலும் உங்களுக்குப் பிடிக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியல், வரலாற்று, வாழ்க்கை முறை மற்றும் போராட்டம் போன்றவற்றை இப்புத்தகம் நினைவு கூறுகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபலமான கவனத்தை ஈர்த்த “எம்பயர்” என்ற நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம் தான் இந்த புத்தகம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 விற்பனை சார்ந்த நுட்பங்களை தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்..!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS