Direct to Consumer Business Ideas in Tamil
எல்லாரது வாழ்விலும் வெற்றி அல்லது தோல்வி என இவை இரண்டும் கலந்த ஒன்று தான் வாழ்க்கையாக இருக்கிறது. இதன் படி பார்த்தால் வெற்றி அல்லது தோல்வி என இவை இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தாலும் அல்லது இரண்டுமே நடந்தாலும் நாம் அந்த நிகழ்வினை நினைத்து கொண்டே இருப்பதன் மூலம் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை. ஆகையால் இறந்த காலத்தை நினைத்து கொண்டே இருப்பதை காட்டிலும் எதிர்காலத்திற்காக திட்டமிடுவதே சிறந்தது ஆகும்.
அப்படி பார்த்தால் பலரும் 2023-ஆம் ஆண்டில் தொழிலில் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் என்ன தொழில் செய்வது, எது அதிக லாபத்தை தரக்கூடியதாக இருக்கும் என இவற்றை எல்லாம் நினைத்து ஒரு வருடம் முழுவதையும் கழித்தவர்களும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அதனால் அடுத்த வருடத்தில் அதாவது 2024-ஆம் ஆண்டில் அதிக லாபத்தை தரக்கூடிய ஒரு தொழிலை தான் இன்றைய பதிவில் எப்படி செய்யப்போகிறோம் என்பதை பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
புதிய தொழில் என்ன செய்யலாம்:
சுயதொழில் என்பது முக்கியமானது என்ற காலங்கள் எல்லாம் இப்போது மாறி ஆன்லைனில் நாம் என்ன சுயதொழில் செய்கிறோம் என்பது தான் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது எல்லாம் எல்லாரும் ஆன்லைன் முறையினை நோக்கி தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஆன்லைன் தொழில் என்பது இத்தோடு நின்று விடக்கூடியதாக இல்லாமல் எதிர்காலத்தில் எல்லாரும் பின்தொடரக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. ஆகவே இவற்றை எல்லாம் மையமாக வைத்து நீங்கள் Direct to Consumer தொழிலை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம்.
தொழில் செய்யும் முறை:
இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் அதிகப்படியான முதலீடு எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை வாங்கி மருவிற்பனை தான் செய்யப்போகிறீர்கள்.
அத்தகைய பொருட்கள் ஆடை, இடம், பாத்திரம் மற்றும் பர்னிச்சர் பொருட்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மறுவிற்பனை தொழிலை பொறுத்தவரை தொழில் விருப்பம் என்பது உங்களை பொறுத்து தான் உள்ளது.
மேலும் நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு முறையிலும் இந்த தொழிலை செய்யலாம்.
வருமானம்:
வருமானம் என்பது மற்ற தொழில்களை காட்டிலும் இதில் நீங்கள் அதிக அளவு பெறலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட பொருளை வாங்குனீர்கள் என்றால் அதனை விட எப்படியும் கூடுதல் விலைக்கு தான் பொருட்களை விற்பனை செய்வீர்கள்.
அதனால் லாபமும் சரி, வருமானமும் சரி இரண்டுமே இதில் அதிகமாக வரும்.
2024-ஆம் ஆண்டில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |