என்னைக்குமே அழியாத தொழிலை செய்ய வேண்டுமா.! அப்போ இந்த தொழிலை தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

கடையை போட்டா வருமானத்தை அள்ளலாம்

மற்றவர்களிடம் சென்று வேலை பார்த்து சம்பளம் வாங்குவதை விட தாமே சுயதொழில் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் அதற்கு படித்திருக்கணுமோ என்று நினைக்கிறார்கள்.  சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். நீங்கள் செய்கின்ற தொழில் ஆனது எப்போதும் டிமாண்ட் உள்ள தொழிலாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன கடை போடுவது.?

நாம் அனைவரும் பயன்படுத்தும் பொருள் மற்றும் இது இல்லாமலும் வெளியே செல்ல மாட்டார்கள். என்னவா இருக்கும்ன்னு யோசித்து கொண்டிருக்கிறீர்களா அது வேறொண்ணுமில்லைங்க Bag தாங்க.. இந்த Bag தொழிலை செய்தால் என்றும் டிமாண்ட் உள்ள தொழிலாக இருக்கும். அதனால் இந்த தொழிலை தாராளமாக செய்யுங்க.

கடையை எங்கே வைப்பது:

கடையை போட்டா வருமானத்தை அள்ளலாம்

நீங்கள் கடையை மக்கள் போக்குவரத்து உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். அப்போது தான் விற்பனை நடக்கும். உதாரணமாக பஸ்டாண்ட் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி பக்கத்தில் இருக்குமாறு பார்த்து வைக்க வேண்டும்.

என்னென்ன விற்பனை:

Bag கடையில் Bag மட்டும் தான் மூலப்பொருட்களாக இருக்கிறது. லஞ்ச் Bag முதல் காலேஜ் Bag வரை உள்ள அனைத்து மாடல்களிலும் Bag-யை வாங்க வேண்டும். மேலும் ஒயர்கூடை, கம்பு பை என்று என்னென்ன Bag மாடல்கள் இருக்கிறதோ அனைத்தையும் வாங்கி கொள்ளலாம்.

நீங்கள் வாங்க கூடிய Bag-களை மொத்தமாக கிடைக்கும் இடத்தில் வாங்கி கொண்டால் தான் அதனின் விலை குறைவாக இருக்கும்.

இந்த Bag-களை வாங்குவதற்கு முதலீடாக 30,000 ரூபாய்  தேவைப்படும். இவை தோராயமாக தான் சொல்லியிருக்கிறேன், இதை விட கூடவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம். மேலும் நீங்கள் வைக்கும் கடையின் அளவை பொறுத்து வருமானம் மாறுபடும்.

2024-ஆம் ஆண்டில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய சுயதொழில்..!

தனக்கென பெயரை அமைக்க வேண்டும்:

கடையை போட்டா வருமானத்தை அள்ளலாம்

நீங்கள் கடை வைத்த பிறகு சுற்றி உள்ளவர்கள் Bag வாங்க வேண்டும் என்று நினைத்தால் உங்க கடை தான் அவர்களின் ஞாபகத்திற்கு வர வேண்டும். இந்த நினைவிற்கு வருவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதாவது உங்களின் Bag-களை தரமானதாக கொடுக்க வேண்டும். மற்ற கடைகளை வைத்து பார்த்தால் உங்களின் கடைகளில் உள்ள Bag-கள் விலை குறைவாக இருக்க வேண்டும். உங்கள் கடையை விளம்பரம் செய்ய வேண்டும்.

வருமானம்: 

இந்த தொழிலில் வருமானம் என்று பார்த்தால் அன்றைய நாள் விற்பனையை பொறுத்து அமைகின்றது. அதனால் தினமும் 3000 ரூபாய் தாரளமாக சம்பாதிக்கலாம்.

கடையே இல்லாமல் வருமானம் மட்டுமே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் இப்படி தெரியுமா 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement