சுய தொழில்
குடும்பத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதே மனிதனின் ஒரே குறிக்கோள். இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகளை தேடி அலைவதை விட ஒரு நடுத்தர சுயதொழிலை தேர்வு செய்ய சிந்திக்க வேண்டியாது அவசியமாக உள்ளது. அத்தகைய தொழில் நமக்கு சுதந்திரைத்தை வழங்குகிறது. சுயதொழிலுக்கு பெரிய படிப்பு அவசியம் இல்லை. முன்னேரவேண்டும் என்ற எண்ணமும் கடினமுயற்சியும் போதும். அத்தகைய கடின முயற்சி கொண்டஅனைவரும் பணம் சம்பாதிக்க மகிழ்ச்சியாக சுதந்திரமாக சொந்தக்காலில் நிற்க ஒரு தொழில் வேண்டும். தொழிலை தொடங்கும் முடிவை எடுத்துவிட்டால் அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்க வேண்டும். இன்றைய பதிவில் பேக்கிரி தொழிலை சிறிய அளவில் தொடங்க எந்த மாதிரியான வாய்ப்புகள் உள்ளது. அதனை எவ்வாறு பயன்படுத்தி கொள்ளவேண்டும் போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில் செய்வது:
பேக்கரி தொழில் :
பேக்கரியில் தயாரிக்கும் உணவுப்பொருட்களை இப்போதைய மக்கள் அதிகம் விரும்பும் ஒரு விஷயமாக உள்ளது. நம்மில் அதிகபேருக்கு பேக்கரியில் கிடைக்கும் குக்கீஸ்கள் தான் மிகவும் பிடிக்கும். என்னதான் சந்தையில் நிறைய பிஸ்கட் மற்றும் கேக் வகைகள் இருந்தாலும் நாம் தேடுவது நம்மூர் பேக்கரியில் கிடைக்கும் குக்கீஸ்களாக தான் இருக்கும். பேக்கரியில் கிடைக்கும் உணவு வகைகள் இப்போதும் தனி சுவையுடன் இருக்கும். அதனால் பேக்கரிகளில் கிடைக்கும் உணவுவகைகளுக்கு எப்போதும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
இந்த காரணிகள் தான் உங்களின் தொழிலுக்கு அடித்தளமாக இருக்கும். மக்கள் விரும்பும் சுவையை பெற நவீன முறையுடன், வீட்டு பாணியில் பேக்கரி உணவு பொருட்களை தயாரித்து வழங்குவதால் அதிக லாபம் பெறலாம்.
சத்தான உணவு பொருட்களை வாங்கி சாப்பிட பலரும் விரும்புகிறார்கள், அதிலும் வீட்டில் இருந்து செய்யகூடிய உணவு பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே நீங்கள் வீட்டில் இருந்தே சத்துள்ள ஓட்ஸ் லட்டு, பிஸ்கட், கேக், நவதானிய திண்பண்டங்களை போன்றவற்றை செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
தர சான்று:
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய நினைத்தால், உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும்.
மேலும், பி.ஐ.எஸ்.மற்றும் fssai தரச்சான்று பெறுவதால், நமது தொழிலுக்கான பாதுகாப்பு அதிகரிப்பதுடன் வியாபாரம் அதிகரிக்கும்.
இட வசதி:
நீங்கள் உங்கள பேக்கரி தொழிலை சிறிய அளவில் ஆரம்பிக்க எண்ணினால் உங்கள் வீட்டு சமையல் அறையே போதுமானது.
வீட்டில் தயாரித்து நீங்கள் வீட்டிலே விற்பனை செய்யலாம். அல்லது அருகில் உள்ள கடைகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
தொழிலை பெரிய அளவில் தொடங்க நினைத்தீர்கள் என்றால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100 சதுர அடி இடமாவது தேவைப்படும்.
இயந்திரங்கள் மற்றும் மூல பொருட்கள்:
பேக்கரி தொழிலை பெரிய அளவில் தொடங்க இயந்திரங்கள் தேவைப்படும்.
அதாவது டப் இயந்திரம், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க அதிகபட்சம் 2,00,000 ரூபாய் வரை தேவைப்படும்.
இவை மட்டும் அல்லாமல் உணவு பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்களாக மாவு, சர்க்கரை, முட்டைகள், வெண்ணெய், பேக்கிங் சோடா போன்ற அடிப்படை பொருட்கள் தவிர சுவையான இதர பொருட்கள் தேவைப்படும். இவற்றை உங்களின் விற்பனைக்கு ஏற்றவாறு மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி கொள்ளலாம்.
இதர செலவுகள்:
வீட்டிலே தயாரிப்பதால் தண்ணீர், மின்சாரம் போன்ற செலவுகள் குறையும்.
அதுமட்டுமல்லாமல் தனியாக பேக்கரி ஆரம்பித்தால் அதற்கு தேவையான ஃபர்னிச்சர் போன்றவற்றிற்கு செலவுகள் அதிகரிக்கும்.
குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம் பெரும் Trending Business
சந்தை வாய்ப்பு:
உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ், ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன.
இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறு விதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள்.
இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இவை மட்டும் அல்லாமல் சோசியல் மீடியாக்களில் உங்களின் பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை பெறலாம். சோசியல் மீடியா மூலம் விற்பனையும் செய்யலாம்.
வருமானம்:
இந்த தொழில் தொடக்கத்தில் லாபத்தை பெற சற்று தடுமாறினாலும் கண்டிப்பாக நல்ல வருமானத்தை பெற்று தரும்.
மாதத்திற்கு 20,000 வரை லாபம் கிடைக்க கூடிய தொழிலாக பேக்கரி தொழில் இருக்கும்.
குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம் தரக்கூடிய EverGreen Business……
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |