Neet Eligibility Criteria 2023 in Tamil
அனைவருக்கும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். ஆனால் அதில் சில நபர்களின் ஆசை மட்டுமே நிறைவேறும். பல நபர்களுக்கு அது கனவாக மட்டுமே இருக்கும். நீட் தேர்வு எழுத வேண்டுமானால் அதற்கு சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் NMC வெளியிட்ட நீட் தேர்விற்கான தகுதிகள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். இத்தகுதிகளில் கல்வி தகுதி, வயது தகுதி, மதிப்பெண் சதவீதம் போன்றவை அடங்கும். எனவே நீட் தேர்வு எழுத வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா..? |
Neet Exam 2023 Eligibility Criteria in Tamil:
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியல், ஆங்கிலம் மற்றும் உயிரியல் அல்லது பயோடெக்னாலஜி போன்ற பாடங்களை தேர்ந்து எடுத்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
17 வயது பூர்த்தி அடைந்தோர் அல்லது அதற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பேங்க் Assistant Manager வேலைக்கு செல்ல என்னென்ன தகுதி வேண்டும் தெரியுமா..? |
மதிப்பெண் சதவிகிதம் எவ்வளவு பெற்றிருக்க வேண்டும்:
ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது,
- UR – 50% பெற்றிருக்க வேண்டும்.
- OBC/SC/ST – 40% பெற்றிருக்க வேண்டும்.
- PWD – 40% பெற்றிருக்க வேண்டும்.
தகுதியான குடிமக்கள்:
- இந்திய குடிமக்கள்
- வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI)
- இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI)
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO)
- வெளிநாட்டு குடிமக்கள்
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |