Revenue Inspector Eligibility in Tamil
பொதுவாக நம் அனைவருக்கும் சிறு வயதில் இருந்தே படித்து முடித்து விட்டு இந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். நாம் படிக்கும் காலத்தில் யாராவது நம்மிடம் நீ என்ன வேலைக்கு செல்ல போகிறாய் என்று கேட்டால், நான் டாக்டர் ஆகப்போகிறேன், கலெக்டர் ஆகப்போகிறேன் என்றெல்லாம் சொல்வோம். ஆனால் அதுவே கல்லூரி பருவத்தில் கேட்டால் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்று சொல்வோம்.
ஆனால் நாம் ஆசைப்பட்ட வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்றால் இங்கு பாதி பேர் வீட்டில் தான் இருக்க வேண்டும். அதுபோல நாம் படிக்கும் படிப்பை பொறுத்து தான் நமக்கான வேலையும் இருக்கிறது. தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒவ்வொரு பணிக்கான தகுதிகளை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று RI பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
RI பணிக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்கள் | Revenue Inspector Qualification in Tamilnadu
பொதுவாக நம் அனைவருக்குமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு நாம் பல தேர்வுகளை எழுதி வருகிறோம். இருந்தாலும் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதி அளவுகோல்கள் இருக்கின்றன.
அந்த வகையில் RI அதாவது Revenue Inspector பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா |
அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சிவில் வரைவுத் துறையில் ஐடிஐ சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் எந்த பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்த பணிக்கு செல்ல தகுதியுடையவர் ஆவர்.
அதாவது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற இந்திய குடிமகனாக இருந்தால் போதுமானது. மேலும் இந்த RI பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Revenue Inspector பதிவுக்கான முக்கிய பொறுப்புக்கள்:
நில விவரங்களை பராமரித்தல்:
- நில அளவீட்டு விவரங்களை சரிபார்த்து பதிவு செய்தல்
- பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை பராமரித்தல்
- நில உரிமையாளர் விவரங்களை புதுப்பித்தல்
வரி வசூலிப்பது:
- நில வரி மற்றும் பிற வரிகள் வசூலித்தல்
- செலுத்தப்படாத வரி நிலுவைகளை கண்காணித்தல்
- வரி செலுத்துதலுக்கான ரசீதுகளை வழங்குதல்
அரசு நில கண்காணிப்புகள்:
- அரசு நிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை கண்டறிதல்
- அரசுக் காணிகளை பாதுகாத்து பராமரித்தல்
- நில அளவீட்டு சரிபார்ப்புகள் செய்தல்
ஊராட்சி மற்றும் வருவாய் பணி:
- கிராம மக்கள் தொடர்பு
- மக்களின் புகார்களை விசாரணை செய்தல்
- பட்டா மாறுதல், உறுதி செய்தல்
தேர்தல் பணிகள்:
- தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகள் செய்வது
- வாக்காளர் பட்டியல் பராமரித்தல்
- தேர்தல் தகவல் திரட்டுதல் மற்றும் கண்காணித்தல்
அரசு திட்டங்களை செய்லபடுத்துதல்:
- அரசு நலத்திட்டங்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்தல்
- நலத்திட்டங்கள் தொடர்பான கணக்குகள் பராமரித்தல்
ஆவண்ணக்கிளின் சரிபார்ப்பு:
- நில ஆவணங்கள், சொத்து விவரங்கள் சரிபார்த்தல்
- ஆவணங்களில் உள்ள தவறுகளை திருத்துதல்
ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்காணித்தல்:
- சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள் அல்லது வரி தப்பித்தல் தொடர்பாக நடவடிக்கை
வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |