Which Degree Is Best For Government Jobs
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலாக இருக்கும். அப்படி என்ன தகவல் அது என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படிக்கவும். பொதுவாக இன்றைய நிலையில் அனைவருமே டிகிரி படிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
இன்னும் சொல்லப்போனால் டிகிரி படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காகவே பலரும் கஷ்டப்பட்டாவது டிகிரி படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நாம் என்ன டிகிரி படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா |
என்ன Degree படித்தால் அரசு வேலை கிடைக்கும்..?
பெரும்பாலும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சிலர் படித்து கொண்டிருக்கும் போதே அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதி வருகிறார்கள்.
அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் காசு வரும். எந்தவொரு பணக்கஷ்டமும் கிடையாது மற்றும் ஓய்வூதியமும் வழங்கப்படும் என்ற காரணத்திற்காக தான் அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் நாம் என்ன பட்டப்படிப்பு முடித்திருந்தால் அரசு வேலை கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.
ரயில்வே டிக்கெட் செக்கர் பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும் தெரியுமா |
வங்கி, பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற பல அரசு நிறுவனங்களுக்கு வெவ்வேறு அதிகாரி நிலை மற்றும் நிர்வாக நிலை பதவிகளுக்கு பட்டதாரி அல்லது ஏதேனும் பட்டம் தேவை. பட்டதாரிகளுக்கான அரசாங்க வேலைகளுக்கான சிறந்த பட்டங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
- வணிகவியல், கலை, அறிவியல், கணக்குகள் போன்றவற்றில் இளங்கலைப் பட்டம் (B.Sc./BA/B.Com/BCA/BBA/BBM)
- பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் (B.Tech/BE)
- இளங்கலை கல்வி (B.Ed)
- பார்மசியில் இளங்கலை பட்டம் (B.Pharm)
- சட்டத்தில் இளங்கலை பட்டம் (BL/BBL)
மேல்கூறிய பட்டப்படிப்பு முடித்திருந்தால் மட்டும் தான் அரசு வேலை கிடைக்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நம்மிடம் திறமையும், முயற்சியும் இருந்தால் என்ன பட்டபடிப்பு படித்திருந்தாலும் அரசு வேலை கிடைக்கும்.
வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |