Kangal Neeye Song Lyrics in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே பாடல்கள் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஏனென்றால் பாடல்கள் நமது மனதில் உள்ள கவலை மற்றும் வலிகளை மறப்பதற்கு உதவி செய்யும். அதிலும் பாடல்கள் நமது வாழ்வில் உள்ள பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அதாவது அன்பு, பாசம், மகிழ்ச்சி,கருணை, இயலாமை, சோகம் மற்றும் தாய்பாசம் போன்ற பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். அதனால் நமது மனமும் பாடல்களை மிக மிக விரும்பி கேட்க தொடங்கும். அப்படி தாய்பாசத்தை மிகவும் அழகாக வெளிக்காட்டியிருக்கும் ஒரு பாடல் தான் முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்கள் நீயே பாடல். இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் இந்த கண்கள் நீயே பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்
Kangal Neeye Lyrics in Tamil:
—BGM—
பெண் : கண்கள் நீயே… காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
பெண் : வண்ணம் நீயே… வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
பெண் : பல நாள் கனவே…
ஒரு நாள் நனவே…
ஏக்கங்கள் தீா்த்தாயே…
பெண் : எனையே பிழிந்து…
உனை நான் எடுத்தேன்…
நான் தான் நீ வேறில்லை…
பெண் : முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்…
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே…
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்…
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே…
ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்
பெண் : கண்கள் நீயே…
காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
பெண் : வண்ணம் நீயே…
வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
—BGM—
பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து…
என்னை தாங்க ஏங்கினேன்…
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்…
இருக்க வேண்டினேன்…
பெண் : தோளில் ஆடும் சேலை…
தொட்டில்தான் பாதிவேளை…
பெண் : பலநூறு மொழிகளில் பேசும்…
முதல் மேதை நீ…
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்…
ஈடில்லா என்மகன்…
பெண் : ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
தீபாவளி திரைப்படத்தின் போகாதே போகாதே பாடல் வரிகள்
பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்…
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்…
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்…
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…
—BGM—
பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு…
தள்ளிப் போனால் தவிக்கிறேன்…
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து…
கருவில் வைக்க நினைக்கிறேன்…
பெண் : போகும் பாதை நீளம்…
கூரையாய் நீலவானம்…
பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது…
ரவிவா்மன் நீ…
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ…
நான் கொள்ளும் கா்வம் நீ…
—BGM—
பெண் : கடல் ஐந்தாறு…
மலை ஐநூறு…
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை…
பெண் : உடல் செவ்வாது…
பிணி ஒவ்வாது…
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்
பெண் : கண்கள் நீயே…
காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
பெண் : வண்ணம் நீயே…
வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
—BGM—
பாடலை பற்றிய குறிப்பு:
படத்தின் பெயர்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: அதர்வா மற்றும் அமலா பால்
பாடலாசிரியர்: தாமரை
பாடகர்கள்: சித்தாரா
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்
தி வாரியர் படத்தின் புல்லட் பாடல் வரிகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |