பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்..!

Pookal Pookum Tharunam Lyrics in Tamil

Pookal Pookum Tharunam Lyrics in Tamil

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமையுமா..? என்றால் இல்ல என்பதே உண்மை. சிலருக்கு மிக மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும். இப்படி இரண்டு நிலையில் இருக்கின்ற நேரத்திலும் நமக்கு மிகவும் உற்சாகத்தை அளிப்பது நமது மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது தான். ஒரு சிலருக்கு பாடல் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஆனால் ஒருசிலருக்கு அந்த பாடலை முழுமையாக கற்றுக்கொண்டு பாடுவது என்பது மிக மிக பிடிக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு பாடலான பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். 

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்

Pookal Pookum Tharunam Tamil Lyrics:

Pookal Pookum Tharunam Tamil Lyrics

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…

உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
இது எதுவோ…

ஆண் : இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
பூந்தளிரே… ஓஹோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

தீபாவளி திரைப்படத்தின் போகாதே போகாதே பாடல் வரிகள்

—BGM—

ஆண் : வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…

பெண் : நேற்று தேவை இல்லை…
நாளை தேவையில்லை…
இன்று இந்த நொடி போதுமே…

ஆண் : வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…

பெண் : வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…

ஆண் : இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…

பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…

ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்

பெண் : ஓ வேர் வுட் ஐ பி…
வித்அவுட் திஸ் ஜாய்…
இன்சைட் ஆப் மீ…
இட் மேக்ஸ் மீ வான்ட்…
டு கம் அலைவ்…
இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை…
இன்டு தி ஸ்கை…
ஓ வேர் வுட் ஐ பி…
இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ…
ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்…
ஓ வேர்… ஓ வேர்…

—BGM—

ஆண் : எந்த மேகம் இது…
எந்தன் வாசல் வந்து…
எங்கும் ஈரமழை தூவுதே…

பெண் : எந்த உறவு இது…
எதுவும் புரியவில்லை…
என்ற போதும் இது நீளுதே…

ஆண் : யார் என்று அறியாமல்…
பேர் கூட தெரியாமல்…
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…

பெண் : ஏன் என்று கேட்காமல்…
தடுத்தாலும் நிற்காமல்…
இவன் போகும் வழி எங்கும்…
மனம் போகுதே…

ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்

ஆண் : பாதை முடிந்த பிறகும்…
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…

பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…

பெண் & ஆண் : இலை தொடங்கும்…
நடனம் முடிவதில்லையே…
இது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை…
பார்த்ததாரும் இல்லையே…

பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…

பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…

ஆண் & பெண் : என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…

ஆண் : அது எதுவோ…

ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…

தி வாரியர் படத்தின் புல்லட் பாடல் வரிகள்

பாடலை பற்றிய குறிப்பு:

படத்தின் பெயர்: மதராசபட்டினம்

படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: ஆர்யா மற்றும் எமி ஜாக்சன்

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

பாடகர்கள்: ரூப் குமார் ரத்தோட், ஜி. வி. பிரகாஷ் குமார், ஹரினி & ஆண்ட்ரியா எரேமியா

இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

வசீகரா பாடல் வரிகள்

அடி பெண்ணே பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com