கண்ணான கண்ணே பாடல் வரிகள்..! | Kannana Kanne Song Lyrics in Tamil

Advertisement

Kannana Kanne Song Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பொதுவாக இரண்டு வகையான மனநிலைகள் தான் இருக்கும். அதாவது ஒன்று மிக மிக மகிழ்ச்சியான மனநிலை மற்றொன்று மிக மிக கவலையான மனநிலை. இவ்விரண்டு மனநிலைகளில் நாம் இருக்கும் பொழுது நமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பது நமது மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது தான். ஒரு சிலருக்கு பாடல் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஆனால் ஒருசிலருக்கு அந்த பாடலை முழுமையாக கற்றுக்கொண்டு படுவது என்பது மிக மிக பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு பாடலான கண்ணான கண்ணே பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம்.

கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்

Kannana Kanne Lyrics in Tamil

Kannana Kanne Lyrics in Tamil

—BGM—

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…

ஆண் : நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

—BGM—

ஆண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ…. ஆஅ…. ஆஅ…. ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
குறு நகை எரிந்தே…
மீட்டாய் என்னை…

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல்… மனதோரம்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என ஏதோ… பயம் கூடும்…

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும்… இதே வினாடி…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நீ தூங்கும் போது…
உன் நெற்றி மீது…
முத்தங்கள் வைக்கணும்…

ஆண் : போர்வைகள் போர்த்தி…
போகாமல் தாழ்த்தி…
நான் காவல் காக்கணும்…
எல்லோரும் தூங்கும் நேரம்…
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்…

ஆண் : ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…

தீபாவளி திரைப்படத்தின் போகாதே போகாதே பாடல் வரிகள்

பாடலை பற்றிய குறிப்பு:

படத்தின் பெயர்: விஸ்வாசம்

படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: அஜித்குமார் , நயன்தாரா

பாடலாசிரியர்: தாமரை

பாடகர்கள்: சித் ஶ்ரீராம்

இசையமைப்பாளர்: டி. இமான்

வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்

ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement