Sakkarai Nilave Song Lyrics in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே பாடல்கள் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஏனென்றால் பாடல்கள் நமது மனதில் உள்ள கவலை மற்றும் வலிகளை மறப்பதற்கு உதவி செய்யும். அதிலும் பாடல்கள் நமது வாழ்வில் உள்ள பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அதாவது அன்பு, பாசம், மகிழ்ச்சி,கருணை, இயலாமை, சோகம், காதல் தோல்வி வலிகள் மற்றும் தாய்பாசம் போன்ற பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். அதனால் நமது மனமும் பாடல்களை மிக மிக விரும்பி கேட்க தொடங்கும். அப்படி காதல் தோல்வி வலி உணர்வை மிகவும் அழகாக வெளிக்காட்டியிருக்கும் ஒரு பாடல் தான் யூத் என்ற தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சக்கரை நிலவே பாடல். இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் இந்த கண்கள் நீயே பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
Sakkarai Nilave Pen Nilave Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…
ஆண் : மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே…
அதை பற்ற வைத்தது உன் கண்ணே…
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து…
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே…
ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…
ஆண் : சக்கரை நிலவே பெண் நிலவே…
காணும் போதே கரைந்தாயே…
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…
ஆண் : காதல் என்ற ஒன்று அது கடவுள் போல…
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை…
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல…
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை…
ஆண் : அன்பே உன் புன்னகை எல்லாம்…
அடி நெஞ்சில் சேமித்தேன்…
கண்ணே உன் புன்னகை எல்லாம்…
கண்ணீராய் உருகியதேன்…
ஆண் : வெள்ளை சிரிப்புகள் உன் தவறா…
அதில் கொள்ளை போனது என் தவறா…
பிரிந்து சென்றது உன் தவறா…
நான் புரிந்து கொண்டது என் தவறா…
ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம்…
சதையல்ல கல்லின் சுவரா…
ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…
—BGM—
பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்
ஆண் : நவம்பா் மாத மழையில்…
நான் நனைவேன் என்றேன்…
எனக்கும் கூட நனைதல்…
மிக பிடிக்கும் என்றாய்…
ஆண் : மொட்டை மாடி நிலவில்…
நான் குளிப்பேன் என்றேன்…
எனக்கும் அந்த குளியல்…
மிக பிடிக்கும் என்றாய்…
ஆண் : சுகமான குரல் யார் என்றால்…
சுசீலாவின் குரல் என்றேன்…
எனக்கும் அந்த குரலில் ஏதோ…
மயக்கம் என நீ சொன்னாய்…
ஆண் : கண்கள் மூடிய புத்தா் சிலை…
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்…
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி…
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்…
ஆண் : அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க…
என்னை ஏன் பிடிக்காதென்றாய்…
ஆண் : கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா…
—BGM—
ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்
பாடலை பற்றிய குறிப்பு:
படத்தின் பெயர்: யூத்
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: விஜய், சாஹீன் கான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: ஹாிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: மணி சா்மா
தீபாவளி திரைப்படத்தின் போகாதே போகாதே பாடல் வரிகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |