வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் வரிகள்..! | Venmegam Pennaga Song Lyrics in Tamil

Advertisement

Venmegam Pennaga Song Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பொதுவாக இரண்டு வகையான மனநிலைகள் தான் இருக்கும். அதாவது ஒன்று மிக மிக மகிழ்ச்சியான மனநிலை மற்றொன்று மிக மிக கவலையான மனநிலை. இவ்விரண்டு மனநிலைகளில் நாம் இருக்கும் பொழுது நமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பது நமது மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது தான். ஒரு சிலருக்கு பாடல் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அந்த பாடலை முழுமையாக கற்றுக்கொண்டு பாடுவது என்பது மிக மிக பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு பாடலான வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம்.

சக்கரை நிலவே பாடல் வரிகள்

Venmegam Pennaga Uruvanatho Song Lyrics in Tamil

Venmegam Pennaga Uruvanatho Song Lyrics in Tamil

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

பூக்கள் பூக்கும் தருணம் பாடல் வரிகள்

பாடலை பற்றிய குறிப்பு:

படத்தின் பெயர்: யாரடி நீ மோகினி

படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: தனுஷ், நயன்தாரா

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

பாடகர்கள்: ஹரிஹரன்

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்

மேலும் இது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Entertainment
Advertisement