ஒரு வருடத்திற்குள் பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவதற்கான அறிவியல் கரணம்

kulanthaiku muthal mottai scientific reason in tamil

குழந்தைக்கு மொட்டை போடுதல்

வணக்கம் நண்பர்களே..! இந்துக்கள்  பிறந்த குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இந்த காலம், காலமாக நம் முன்னோர்களால் பின்பற்றப்படுகிறது. இதெல்லாம் முன்னோர்கள் சொன்னார்கள் நாமும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் அதற்கு பின்னாடி ஒளிந்திருக்கும் உண்மையான காரணம் தெரியுமா.? மொட்டை அடிக்கிறதுக்கெல்லாம் அறிவியல் காரணம என்று சிரிக்காதீர்கள். சில நேரம் உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும். நம் முன்னோர்கள் எந்த விஷயத்தையும் சும்மா சொல்ல மாட்டார்கள். அதற்கு பின்னாடி அறிவியல் காரணம் இருக்கும். அதன்படி பிறந்த குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிப்பதற்கான அறிவியல் காரணத்தை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ குழந்தைக்கு மொட்டை அடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்..!

மொட்டை அடிப்பதற்கான அறிவியல் காரணம்:

பொதுவாக நிறைய பழக்க வழக்கங்களின் உண்மையான காரணம் தெரியாமல் பின்பற்றுகிறோம். ஆனால் அப்படி பின்பற்றும் விஷயங்களில் உண்மை ஒளிந்திருக்கிறது. உண்மையான காரணத்தை சொன்னால் யாரும் பின்பற்ற மாட்டார்கள் என்று தான் நம் முன்னோர்கள் இப்படி ஒரு வழிமுறையை செய்துள்ளனர். அந்த பிறந்த குழந்தைக்கு ஒரு வருடத்தில் மொட்டை அடிப்பதற்கான அறிவியல் காரணத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

குழந்தை கருவில் இருக்கும் போது அதை சுற்றி பனிக்குடம் சூழ்ந்திருக்கும். இதனால் கருவில் 10 மாதமும் அந்த குழந்தையை இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை சூழ்ந்திருக்கும். நாம் என்ன தான் கழிவுகளை வெளியேற்றினாலும் தலையில் சேரும் கழிவுகள் முடியின் வழியாக தான் வரும். இதனால் தான் குழந்தை பிறந்த சில மாதங்களிலே மொட்டை போட சொல்கிறார்கள்.

நீங்கள் குழந்தை பிறந்தவுடன் மொட்டை அடிக்கா விட்டால் கழிவுகள் அப்படியே தலையில் தங்கிவிடும். கழிவுகள் அப்படியே தங்கிட்டால் வயதான பிறகு நோய்கள் ஏற்படும்.

இந்த காரணத்தினால் தான் பெரியவர்கள் கடவுளுக்கு காணிக்கை என்ற பெயரில் பிறந்த உடன் குழந்தைக்கு மொட்டை அடிக்க சொல்கின்றனர்.

3 வயதில் மொட்டை:

பிறந்த உடன் ஒரு மொட்டையும் 3 வயது அல்லது 3 தடவை மொட்டை போட வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கு காரணம், முதல் தடவை போட்ட மொட்டையில் ஏதும் கிருமிகள் இருந்தால் அடுத்த மொட்டையில் கிருமிகள் வெளியேறிடும் என்பதற்காக அடுத்த மொட்டை அடிக்க சொல்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் facts