விரதம் இருப்பதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா.?

Advertisement

Scientific Reason Behind Fasting in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் விரதம் இருப்பதற்கான அறிவியல் காரணம் என்னவென்று தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக நம் வீட்டில் உள்ளவர்கள் விரதம் இருப்பார்கள், ஆனால் எதற்காக விரதம் இருக்கிறார்கள் என்று தெரியாது, அதை நாம் கேட்டால் கடவுளிடம் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் ஆண்களை விட பெண்கள் தான் சஷ்டி விரதம்,  பிரதோஷ விரதம்,  கார்த்திகை விரதம், வெள்ளி கிழமை விரதம், செவ்வாய் கிழமை விரதம் என  பலவகையான விரதங்களை கடைபிடிப்பார்கள். ஆனால் இதற்கான அறிவியல் காரணத்தை அறிந்து தான் நம் முன்னோர்கள் விரதத்தை கடைபிடித்திருக்கிறார்கள், மேலும் இதற்கான அறிவியல் காரணம் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாங்க.

கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ?

 விரதம் இருப்பது ஏன்.?

நம்முடைய மூடநம்பிக்கைகளை பொறுத்தவரை கடவுளுக்கு விரதம் இருப்பதால் அவருடைய அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும் என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.  கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் விரதமும் இருக்கிறார்கள். இதனை ஆன்மிக ரீதியாக இப்படி சொல்லப்படுகிறது.

பொதுவாக இந்துக்கள் மட்டும் தான் விரதங்களை கடைபிடிக்கிறார்கள் என்று கிடையாது, முஸ்லீம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோம்பு என்ற விரத முறைகளை கடைபிடிப்பார்கள், அதேபோல் கிறிஸ்துவர்கள்  இயேசுவை சிலுவையில் அறைப்பட்டு, உயிர் பெற்று வந்ததினால் 40 நாட்கள் வரையும் விரதம் இருப்பார்கள். இதுபோன்று   நாம் சாப்பிடாமல் விரதம் இருப்பதினால் உடலில் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன, அதிலும்  24 மணி நேரம் வரை சாப்பிடாமல்  விரதம் இருப்பவர்களுக்கு  உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. அப்படி விரதம் இருப்பதால் உடலில்  என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அறிவியல் ரீதியாக தெரிந்துகொள்வோம்.

நாம் உண்ணும் உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

விரதம் இருப்பதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா.? 

பொதுவாக நாம்  சாப்பிடாமல் விரதம் இருப்பது  நம் உடலில் இருக்கும்  ஜீரணமாகும் உறுப்புகளுக்கு ஓய்வுகள் தருவதற்காகத்தான், அதேபோல்  மன ரீதியாக பல பாதிப்புகளை கொண்டிருப்போம். விரதத்தை கடைபிடிக்கும் பொழுது மனதில் இருக்கும் சில பாதிப்புகள் கொஞ்சமாக மாறுபடும்.  

விரத்தை கடைபிடிப்பத்தினால் நம் உடலும்,  நம் மனதில் இருக்கும் எண்ணற்ற ஆசைகளும் கட்டுக்குள் வருகின்றன. இதனால் விரதம் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான்அறிவியல் காரணம்” என்று சொல்கிறார்கள்.

 

கீழே விழுந்து வணங்குவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement