பாயில் உறங்குவதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

The science behind sleeping on a mat in tamil

The Science Behind Sleeping On A Mat

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் பொதுநலம் வாசகர்கள் அனைவருமே சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள போகின்றோம். அது என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். ரொம்ப யோசிக்க வேண்டாம் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான பதில் கிடைத்து விடும். இந்த காலத்தில் பல வீடுகளில் கட்டில் மெத்தை என்று வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் பாயில் தான் படுத்து உறங்குவார்கள். அப்படி பாயில் படுத்து உறங்குவதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் மறைந்திருக்கிறது. அது என்ன என்று உங்களுக்கு  தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

காதுகளில் “கொய்ங்” என்ற சத்தம் கேட்பதற்கு காரணம் என்ன தெரியுமா..?

பாயில் உறங்குவதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன..? 

பாயில் உறங்குவதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன

பொதுவாக அந்த காலகட்டத்தை விட இந்த காலகட்டம் எவ்வளவு மாறி இருந்தாலும் சில விஷயங்களை நாம் மாற்றி கொள்ளாமல் இன்றும் கடைபிடித்து வருகின்றோம். அதுபோல நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் மறைந்திருக்கிறது.

அப்படி நம் முன்னோர்கள் கூறிய விஷயத்திற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉👉👉 முன்னோர்கள் கூறிய விஷயத்திற்கு பின் இருக்கும் அறிவியல் காரணங்கள்..!

சரி இந்த காலத்தில் பல வீடுகளில் கட்டில் மெத்தைகள் இருக்கின்றன. அதனால் பலரும் பாயில் படுப்பதை தவிர்த்து கட்டிலில் தான் படுத்து உறங்குகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே பாயில் தான் படுத்து உறங்கினார்கள். அப்படி பாயில் படுத்து உறங்குவதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. அது என்ன என்று இங்கு பார்ப்போம்.

பொதுவாக  நம் உடலில் இருக்கும் சூட்டை உள்வாங்கும் தன்மை பாய்க்கு இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் அவர்களுக்கு இடுப்பு வலி மற்றும் முதுகு வலி எதுவும் வராது. அதுபோல பெண்கள் சிறு வயதில் இருந்து பாயில் படுத்து உறங்கினால் அவர்களுக்கு பிரசவ நேரத்தில் சுகப்பிரசவம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைப்பதால் அவர்களுக்கு கழுத்தில் சுளுக்கு பிடிக்காது. அதுபோல குழந்தையின் முதுகெலும்பு சீராகவும் குழந்தை வேகமாக வளரவும் உதவி செய்கிறது. மேலும் சிறு வயதில் இருந்து பாயில் படுத்து உறங்கி வருபவர்களுக்கு கூண் முதுகு விழாது.  

இந்த காரணத்திற்காக தான் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் பாயில் படுத்து உறங்கினார்கள். இதுவே பாயில் உறங்குவதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணமாகும்.

கை முட்டியில் அடிபட்டால் ஏன் ஷாக் அடிக்குதுனு உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts