Honey Bee Bite Treatment in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் தேனீ கொட்டினால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒருவருக்கு தேனீ கொட்டினால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? தேனீ கொட்டி விட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். அதனால் தேனீ கொட்டியவருக்கு உடனே முதலுதவி செய்ய வேண்டும். தேனீ கொட்டியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..! |
தேனீ கொட்டினால் முதலுதவி:
ஒருவருக்கு தேனீ கொட்டி விட்டால் கடுமையான வலி, கொட்டிய இடத்தில் கடுமையான அரிப்பு, வீக்கம், மறத்து போதல் மற்றும் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அதேபோல சிலருக்கு கடித்த இடத்தில் நிறம் மாறுதல், நாக்கு அல்லது தொண்டை வறண்டு போவது, வாந்தி, தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம், இதய துடிப்பு அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதனால் தேனீ கொட்டினால் உடனே முதலுதவி செய்ய வேண்டும்.
ஸ்டெப் -1
ஓவருக்கு தேனீ கொட்டி விட்டால் உடனே அந்த இடத்தில் சோப்பு நீரை ஊற்றி கழுவ வேண்டும்.
பின்பு ஒரு துணியை கொண்டு துடைத்து விட்டு அந்த இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் அவருக்கு ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும், தேனீயின் விஷம் உடலுக்குள் செல்லாமல் இருக்கும்.
ஸ்டெப் -2
தேனீ கடித்தவருக்கு விஷம் உடலுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்கு தேன் பயன்படுத்தலாம். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால் தேனீ கடித்த இடத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை போக்குகிறது.
தேனீ கொட்டிய இடத்தில் நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்துவதற்கு தேனை பயன்படுத்தலாம்.
ஸ்டெப் -3
ஒருவருக்கு தேனீ கொட்டி விட்டால் அந்த இடத்தில் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். தேனீயின் விஷம் உடலுக்குள் செல்லாமல் தடுப்பதற்கு பேக்கிங் சோடா பயன்படுகிறது. பேக்கிங் சோடாவுக்கு விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது.
அதனால் தேனீ கொட்டிய இடத்தில் பேக்கிங் சோடாவை குழைத்து தடவ வேண்டும். இதனால் தேனீ கொட்டிய இடத்தில் ஏற்பட்ட வலி, வீக்கம், சருமம் சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
ஸ்டெப் -4
தேனீ கடித்து விட்டால் அந்த இடத்தில் பற்பசையை தடவ வேண்டும். பற்பசையில் இருக்கும் காரத்தன்மை விஷத்தின் வீரியத்தை குறைக்க செய்கிறது.
அதனால் தேனீ கடித்த இடத்தில் பற்பசை தடவுவதால் வலி, வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
நாய் கடித்தவுடன் உடனே செய்யவேண்டிய முதலுதவி |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |