ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்

Advertisement

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? | First Indian Woman to Win an Olympic Medal in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. இந்த ஓலிம்பிக் விளையாட்டில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கம், வெண்கலம் என்று பல பதக்கங்களை பெறுகின்றன. அந்த வகையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? | Who Was the First Indian Woman to Win Olympic Medal

விடை: கர்ணம் மல்லேஷ்வரி.

  • கர்ணம் மல்லேஸ்வரி ஜூன் 01, 1975-ஆம் ஆண்டு பிறந்தவர். சிறீக்காகுளம், ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தவர். 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம்தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.
  • 22 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்காக சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் கர்ணம் மல்லேஷ்வரி.
  • அவரை தொடர்ந்து மேரி கோம், பி.வி சிந்து, சாய்னா, சாக்ஷி மாலிக் மாதிரியான வீராங்கனைகள் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிஜமாக்கி வருகிறார்கள்.
  • ஆனால் விளையாட்டு களத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை போட்டது கர்ணம் மல்லேஷ்வரி தான்.
  • ஆந்திராவில் பிறந்த கர்ணம் விளையாட்டு உலகில் அவர் படைத்த சாதனைக்காக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
  • இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கத்தை இந்தியா சார்பாக சர்வதேச பளு தூக்குதல் போட்டிகளில் விளையாடி வென்றுள்ளார்.
  • மொத்தமாக 240 கிலோவை அலேக்காக தூக்கி ஒலிம்பிக்கில் 69 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் கர்ணம்.
இந்தியாவின் முதல் பெண்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement