இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் யார்? | Indhiyavin Muthal Mananala Pen Maruthuvar

Advertisement

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் இந்திய நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் யார் என்று தெரிந்துக்கொள்ளுவோம்.. பொது அறிவு சம்பந்தமான கேள்விகள் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்று. பொது அறிவு பற்றிய கேள்விகள் அனைத்தும் நமக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக அரசு தேர்வுகளில் வெற்றிப்பெறலாம். வாங்க இந்த பதிவில் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் (mananala maruthuvar) யார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்..

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் யார்?:

விடை: டாக்டர் சாரதா மேனன்

கல்வி:

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்றவர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில் மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர்.

இவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர்.

ஆற்றிய நிறுவனம்:

சென்னையில் சாரதா மேனன் தலைமையில் இயங்கி வந்த ‘மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் (SCARF)’ இவருடைய பங்களிப்பு பெருமைக்குரிய ஒன்றாகும்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?

பெற்ற விருது:

  • இவர் செய்த சேவைகளை பாராட்டும் வகையில் இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி டாக்டர் சாரதா மேனனை கவுரவம் செய்துள்ளது.
  • இவருடைய சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழ்நாடு அரசு அவ்வையார் விருது அறிவித்துள்ளது.

மறைவு:

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார் என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார்?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement